பக்கம்:ஒத்தை வீடு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 புதைமண் போட்டுக் கொண்டிருந்தாள். இவளை, நோட்டமிட்ட இன்ஸ்பெக்டர், எல்லா விவகாரத்தையும் சொன்ன பயல், இவள் காதல் விவகாரத்தை மட்டும் சொல்லாமல் விட்டதில் திகைத்தார். "ஒருவேளை விசாரிப்பு சரியாக கிடைக்கவில்லை என்று பொருளா? அல்லது ஒரு பெண்ணின் பெயரை அம்பலப்படுத்தக்கூடாது என்ற பெருந்தன்மையா? என்று ஆய்வு செய்தார். எல்லோரும் பேசி, இடக்கு மடக்காய் விவகாரம் விகாரமாகி விடக்கூடாது என்று நினைத்த இன்ஸ்பெக்டர், பொதுப் படையாகக் கேட்டார். "நீங்க தானே இவரோட சித்தப்பா சிவனுப்பாண்டி? அந்தம்மா உங்க ஒய்ப் லட்சுமி. இது அருண், அவள் சுபேதா. சரியா..." சரிதான் என்பதுபோல், குழந்தைகள் உட்பட எல்லோரும் தலையாட்டினார்கள். இன்ஸ்பெக்டர், மீண்டும் கேட்டார். "மோகனன் என்கிறவன் யாரு?" செல்வா, குடும்பத்தினர் மெளனமாய் நின்றபோது, கவிதா, கண்ணிரை துடைத்துக்கொண்டு, "அவன் ஒரு சமூக விரோதி. என் கூடப்பிறந்த அண்ணன்' என்றாள். இன்ஸ்பெக்டருக்கு, போன மூச்சு திரும்பி வந்தது. இந்த மோகனனை வைத்தே, எதிர்முனை கொம்பனை மடக்கி விடலாம். தன்க்கு எதிராக போடப்பட்ட சார்ச்சீட்டும், விசாரணை அறிக்கையும், பதவி உயர்வாக மாறும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை ஆனாலும், அந்த சமயத்தில், அவர் மனிதனாகவே பேசினார் சிவனுப்பாண்டியை நேரடியாகவும், கவிதாவை மறைமுகமாகவும் பார்த்தபடியே பேசினார் "இந்தப் பையன் உங்க எல்லார் மேலயும் உயிரையே வைத்திருக்கான். விதி வசத்தால் தன்னையும் மீறி இப்படி ஆயிட்டான். இவன் வேணுமுன்னே உங்கள நோகடிக்கல. இப்போ. இவன் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளி மாதிரி" செல்வா, குறுக்கிட்டான் "எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க இன்ஸ்பெக்டர் ஸார். இல்லாட்டி, எங்க சித்தியாலதான் இப்படி ஆயிட்டேன்னு, எங்க சித்தப்பா எங்க சித்தியைத் திட்டுவார்." "பேசாம இருடா, பெரியவங்க பேசும்போது குறுக்கிடப்படாது என்கிற பண்பாட்டை கத்துக்கோ மிஸ்டர். சிவனுப்பாண்டி இவன் எல்லா விஷயங்களையும் என்கிட்ட சொல்லிட்டான். இவன் ரோசமா ஒடிப்போனதும், செல்லமாய் பழகின குழந்தைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/226&oldid=762289" இலிருந்து மீள்விக்கப்பட்டது