சு. சமுத்திரம்
227
வெறுத்ததும், இவன் தானாய் செய்ததல்ல. அதுக்கு காரணங்கள்ன் இருக்கு. அது உங்களுக்கு தெரிய வேண்டாம். அதற்கு உரியவர்களை கவனிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இப்போது, இவனுக்கு தேவை மனோதத்துவ ரீதியான சிகிச்சை என் தங்கை சத்தியா, கிளீனிக்கல் சைக்காலஸிஸ்ட் அவள்கிட்ட ஒரு கேசை கொடுக்கிறதா நினைக்காதிங்க. பையனோட சிக்கல்கள்களை சரிப்படுத்திடுவாள். இல்லையானால், அப்பாய்மெண்ட் வாங்கவே ரெண்டு மாதம் ஆகும்.”
இன்ஸ்பெக்டர், டெலிபோனில், தங்கையிடம் பேசினார். பிறகு, இவர்களிடம், “நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அப்பாய்மெண்ட் கொடுத்திருக்காள். இந்த விசிட்டிங் கார்டுதான் அவளுடைய அட்ரஸ். என்னுடைய மைத்துனரும், அதாவது தங்கையின் கணவரும் மனோதத்துவத்தில் லண்டனில் ‘டாக்டர் ஆப் லெட்டர்ஸ்’ என்று பட்டம் பெற்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர். ஆனாலும், தொழிலுக்கு மதிப்பு கொடுக்காத தேசமாச்சே நமது நாடு. எதுக்காக சொல்றேன்னா, என் தங்கையால் முடியாட்டாலும், அவர் சரிப்படுத்திவிடுவார் என்கிறதுக்காகத்தான் சொன்னேன் நீங்க எல்லாரும் இந்த மேடம் கவிதாவுக்கு நன்றி சொல்லணும். இவங்க அப்பாதான் இந்த மேடத்தோட பெயரை என்கிட்ட சொன்னவரு. செல்வா! ‘ஆயிரம் மனச்சிக்கல்லயும் நீ கிரேட்டுடா.’ என்று கவிதாவையும், அவனையும் மாறி மாறி பார்த்தபடி, பேசினார். கவிதா, புரிந்து கொண்டாள். செல்வா, வலிக்கிற தசைக்கோடுகளை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.”
சித்திக்காரி, ஒரு ‘லா’ பாயிண்டை கிளப்பினாள்.
“அந்தம்மாகிட்ட இவனுக்கு என்ன சிக்கலுன்னு நீங்க சொல்லலியே அய்யா...”
“உங்களுக்கு தெரியக்கூடாது என்கிறதுக்காகத்தான் சொல்லல இனிமேல் என் தங்கைபாடு... இந்தப் பையன் பாடு... உங்ககிட்ட எந்த பணமும் வாங்க மாட்டாளாம். காரணம்... இவன் பிரச்சினை, அவள் தொழிலில் ஒரு சவாலாம். சரி... போயிட்டு...”
குழந்தைகள் தவிர, எல்லோரும் முகத்தில் ஈயாடாமல் போனார்கள் வாசலுக்கு போய்க் கொண்டிருக்கும்போது, இன்ஸ்பெக்டர், “மிஸ் கவிதா... இங்க வாறீங்களா... நீங்க மட்டும்.” என்றார்.
கவிதாவும், இன்ஸ்பெக்டரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டார்கள்.
“மிஸ் கவிதா! இவனை நீங்க நண்பனாகவோ இல்ல காத... ஸாரி அண்டை வீட்டுக்காரனாகவோ அடைந்ததற்கு பெருமைப்