பக்கம்:ஒத்தை வீடு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 புதைமண் படணும். நீ காதலித்த பெண் யாருடான்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அடி என்கிற மாதிரி அடி கொடுத்தோம். அப்படியும் அவன் மூச்சு விடல. ஆனால், உங்கண்ணன் மோகனன் மேல, நான் ஆக்ஷன் எடுக்கலாமுன்னு யோசிக்கேன்" "எடுத்தாலும் நான் கவலப்படமாட்டேன். செல்வாவை, எங்கிட்ட இருந்து பிரித்த கொடியவன் அவன்." இன்ஸ்பெக்டர், சிறிது ஏமாந்தார். சுருதி மாற்றிப் பேசினார். "தட்ஸ் ஆல் ரைட் நான் ஆக்ஷன் எடுக்கிறதாய் இல்ல. இப்போ அது முக்கியமில்ல. உங்க காதலுக்காக நீங்க பெருமைப்படலாம். பையனை, என் சிஸ்டர் உங்ககிட்ட முன்னால எப்படி இருந்தானோ, அப்படி ஒப்படைத்துடுவாள் "பை தி பை என் பிரமோஷன் பைலும், விசாரணை அறிக்கையும் உங்கப்பா டேபிள்ல இருக்கு" "கண்டிப்பா அப்பா உதவுவார் ஸார். நீங்களும் ஒங்க சிஸ்டர்கிட்ட பழையபடியும் அழுத்தமாகப் பேசி." "கவலைப்படாதீங்க மேடம். உங்கள மாதிரி என்ன மாதிரி நல்லவங்களுக்கு நல்லதே நடக்கும். நான் செய்த நல்ல காரியத்தை, நானே உங்க அப்பாகிட்ட டெலிபோன்ல சொல்லட்டுமா? இல்ல நீங்க சொல்lங்களா?" "நானே சொல்லிடுறேன். ஸார். அதுதான் அவர் டேபிள்ல இருக்கிற உங்க பைலுக்கு எபெக்டா இருக்கும் தேங்க் யூ ஸார்." கவிதா, மனதிற்குள் சிரிப்பும் அழுகையுமாய் தேக்கி வைத்துக்கொண்டு, கால்களை தேய்த்து தேய்த்து நடந்தாள். £6 அண்ணன் அனுப்பிய அத்தனை பேரோடும், டாக்டர். சத்தியா, தனித்தனியாகப் பேசினாள் குழந்தைகளோடு பேசும்போது குழந்தைபோலவே பேசினாள். இறுதியாக அவர்களில் யாராவது ஒருவர், வெளியே இருக்கலாம் என்று சொன்னாள். எல்லோருமே இருக்கப்போவதாக தர்ணா முறையில் பதிலளித்தார்கள். பிறகு, செல்வாவை கூப்பிட்டாள். சுமார் முக்கால் மணி நேரம்வரை அவனது பிரச்சினைகளை கேட்டறிந்தாள் கேள்விகளில் அளவுக்கு மீறாத அனுதாபம். அவன் பதில்களுக்கு தலையாட்டியதில், இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/228&oldid=762291" இலிருந்து மீள்விக்கப்பட்டது