பக்கம்:ஒத்தை வீடு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 புதைமண் "நீ என்ன செய்யுறாய்?" "அழுகிறேன்." "எப்படி அழுதே?” செல்வா, அழுது காட்டினான். தலையில் அடித்துக் காட்டினான். முகத்தை மோதிக் காட்டினான். "எப்பா. எப்பா." என்ற ஒற்றைச் சொல்லால் புலம்புகிறான், ஆர்ப்பரிக்கிறான். "சரி அழுகையை நிறுத்து நீ சிறுமைப்படவேண்டியவன் இல்லை. உங்கப்பாவை பார்த்து பெருமைப்பட வேண்டியவன். இந்த சென்னையில் சிட் பண்ட் நடத்தியவர்கள், தங்கள் பனங்களை வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, திவாலாகி விட்டதாக நாடகம் போடுகிறார்கள். கோடி கோடியாக சம்பாதித்த ஹர்ஷத் மேத்தா இன்னும் கம்பீரமாய் திரியுறான். ஆனால், சொத்தையும், நகையையும் விற்று அத்தனை பணத்தையும் அடைத்த நவீன அரிச்சந்திரன் உங்கப்பா. இதுக்கு நீ பெருமைப்படனுமா? சிறுமைப்படனுமா?" "பெருமைப்படனும்." "நல்லது. அப்படித்தான் எடுத்துக்கணும் இப்போ உனக்கு பத்தொன்பது வயது. சென்னையில் இருக்கே. பக்கத்து வீட்டு கவிதாவை எப்படி பிடித்தே?" "நான் பிடிக்கல. அவள்தான் பிடித்தாள்:” 'சரி யார் பிடித்தீர்கள் என்பது முக்கியமில்ல. கவிதா நல்லவளா? கெட்டவளா?" "ஆக மொத்தத்தில் நல்லவள்." "அது என்ன ஆக மொத்தம்?" "டுப்ளிகேட் அம்மாவ பற்றி சொல்லல” "கவிதா, ஒடிப்போன தன் அம்மாவைவிட இந்த அம்மாவை உசத்தியாய் நினைத்திருக்கலாம் இல்லியா? பெற்று போட்ட கடமைய முடிக்கும் முன்னால, ஒடிப்போனவளவிட, வலிய வந்து இவளுக்கு தானே அம்மாவான ஒருத்தி மேலானவள்தானே.” "ஆமாம். ஆமாம்." "கணவன் மனைவியாய் இருந்தால்கூட, ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கலாம். தாயாய் பிள்ளையாய் இருந்தாலும், வாயும் வயிறும் வேறதானே? சொந்த அம்மாவாய் ஒன்றிப்போன ஒரு பெண்ணைப் பற்றி உன்னிடம் மாற்றிப் பேச, அவளுக்கு மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/234&oldid=762298" இலிருந்து மீள்விக்கப்பட்டது