பக்கம்:ஒத்தை வீடு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 புதைமண் "செய்துட்டேன். அய்யோ! சகிக்கல." "இப்போ புழு அரிக்கும் உறுப்பை கொண்ட அவனை, நீ காலால் உதைத்து, மல்லாக்க கிடத்துறே. கிடத்துறியா?” செல்வாவின் கால்கள், கட்டில் சட்டங்களை உதைக்கின்றன. கைகள் அங்குமிங்குமாய் ஆகாயத்தில் குத்து விடுகின்றன. லட்சுமி, இதமாகக் கேட்கிறாள். "இப்போ இப்படி சீழ் பிடித்து கண்டதே காட்சி, கொண்டதே கோலமாகி உன்னைக் கெடுத்த அந்த மோகனனுக்கும், நீ உதைத்தியே அந்த தாமோதரன் கிழவனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குதா?” "இல்ல. இல்லவே இல்ல. அவன் பொறுக்கி. இவன் புறம்போக்கு” "eண்டும் பெயர் சொல்லி திட்டு” "தாமோதரன் கிழவன் பொறுக்கி, மோகனப் பயல் புறம்போக்கு” "மோகனனை இன்னும் நல்லாத்திட்டு." "அயோக்கியப் பயலே. திருட்டுப் பயலே. பொறுக்கி நாயே. புண் பிடிச்ச பிசாசே சீழ்வடியும் சிறங்கா" “சரி. இப்போ நான் பத்து எண்ணுவதற்குள் நீ எழுந்து விடுவாய். நான் சொன்னது எதுவும் உன் உள் மனதில் பதியுமே தவிர, வெளி மனதிற்கு வராது. சரி. ஒன்று. இரண்டு. மூன்று." செல்வா, மெல்ல எழுந்தான். அங்குமிங்குமாய் கண்களை சுழற்றினான். சத்தியா, அந்த பெயருக்குரிய பொருள்போல், அமைதியாய்ச் சிரித்தாள். பிறகு ஒரு கேள்வி கேட்டாள். "இப்போ எப்படி இருக்குது தம்பி?” "உடம்பு முழுக்க ஏதோ ஒரு சுகம் ஆகாயத்தில் பறக்கிறது மாதிரியான லகு. நடந்ததை நினைக்க மறுக்கும் மனம் நல்லதை மட்டுமே நாடும் இதயம். நான் கவிஞனாயிட்டேன் இல்லியா மேடம்? 'நீ கவிஞனேதான். கவிதாவைப் பற்றி மட்டும் கவிதை எழுதாதே. சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுது. உன் பெயரை வெளியிடாமல் ஓரினச் சேர்க்கையால் ஏற்படும் கேடுகளைப் பற்றி கட்டுரை எழுதி எனக்குக் கொடு. நான் அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/236&oldid=762300" இலிருந்து மீள்விக்கப்பட்டது