பக்கம்:ஒத்தை வீடு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 237 ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஏதாவது ஒரு நல்ல பத்திரிகையில வெளியிடுறேன். சரி. வெளியில உனக்காக உன் சித்தப்பா குடும்பமும், கவிதாவும் கண்ணிரும் கம்பலையுமா நிற்கிறாங்க. உனக்கு சுகமாயிட்டுதுன்னு சொல்லு" "அப்பா நான் இனிமே வரவேண்டியதில்லியா மேடம்?" "மனம் என்பது ஒரு மாயப் பிசாசு என் முன்னால் உன் மனம் ஆரோக்கிய வேடம் போடும். ஆனால், சில சமயம் அது அற்ப ஆயுளில் முடிந்து, மீண்டும் அதே மனம் பேயாட்டம் போடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, நீ வேறு, மனம் வேறுன்னு நினைத்துக்கோ. இது ஒரு செஷன்ல முடியுற மெஸ்மரிசம் ட்ரீட்மெண்ட் இல்ல. குறைஞ்சது ஐந்தாறு தடவையாவது நீ வரவேண்டியதிருக்கும். ஏன் மூஞ்சை தூக்குறே? நல்லவேளை உன்னுடைய அனுபவம் ஒரு வாரம் என்கிறதுனால தேறிடுவே. பார்க்குல பார்த்தியே அந்தப் பையன். அவன் வயசுல துவங்கி இருந்தா உன்னை திருத்தியிருக்கவே முடியாது. அப்புறம், எய்ட்ளேபாடதான் திரிய வேண்டியதிருக்கும். "நல்லவேள ஒன் ரத்தத்த டெஸ்ட் பண்ணியதில் உனக்கு அது இல்ல. இனிமேலும், இதையே தொழிலா வச்சா நீ உருப்பட மாட்டேன்னு புரியுதா?” "புரியுது, மேடம். இப்போ அதுமேல அதிகமாய் ஆசையில்ல. திருந்திடுவேனா மேடம்?" 'திருந்திட்டே... திருந்திட்டே... சில திருத்தங்கள்தான் செய்யனும். சரி. உனக்கும் வேலை இருக்கும். எனக்கும், ஆட்கள் காத்திருக்காங்க. அப்புறம்." செல்வா, சத்தியாவின், பேச்சு இழுப்பை ஊன்றுகோலாய் ஆக்கியதுபோல் எழுந்து, வெளியேறினான். பிறகு, திரும்பிவந்து, ஒரு கேள்வி கேட்டான். "கவிதாவோட பழகலாமா மேடம்.?" "லேசு. லேசாய்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/237&oldid=762301" இலிருந்து மீள்விக்கப்பட்டது