பக்கம்:ஒத்தை வீடு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 239 "வா தம்பி. வா" என்றாள் உடனே, செல்வா, மோகனன் எழுதிய கடிதத்தையும், அதில் தனது நடவடிக்கைகள் குறித்து, எழுதியதையும், குறிப்பிட்டான். இப்போது அவன், "ஹோமோ பத்திரிகை ஆசிரியனாம் அவன் கடிதம் வந்ததிலிருந்து, எனக்கு என்னவோ போலிருக்கிறது. எல்லாம் தீர்ந்துவிட்டதாக நினைத்த போது, இப்படி சின்ன அளவில் வருகிற தடுமாற்றம், பெரிய அளவில் வந்துவிடக்கூடாதே என்று பயமாக இருக்குது பரீட்சை வேற நெருங்கிடுது” என்றான். "உங்களுக்கும் ஹோமோ மூடு இருந்திருக்கு செல்வா. பறவை பறந்து போனாலும், அது இருந்த மரத்தின் கொப்பு ஆடுவது மாதிரி உங்கள் மனம் ஆடுகிறது." "நோ. நோ. மேடம்.” "அதை நான் சொல்லணும். ஆனாலும், உங்கள் ஆண்பால் சேர்க்கை சிறிது வித்தியாசமானது. ஒரு ஆணைப் பெண்ணாகப் பாவித்து பாலியலில் ஈடுபடும் போக்கு" "அப்படில்லாம்." "இருக்குது. இனிமேல் இருக்காமல் செய்து விடுகிறேன். நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி படித்திருப்பீங்க. இது ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டாவது வயதில், ஆண் தன்மை, பெண் தன்மைக்குரிய ஹார்மோன்களை சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது. அப்போதுதான் அந்தரங்க உறுப்புகளில் முடி முளைக்கிறது. மகரக்கட்டு எனப்படும் குரல் மாற்றம் ஏற்படுகிறது. பதினோரு சிறுவனோட அல்லது சிறுமியோட முதுகெலும்பைத் தடவினால், அவன் அல்லது அவள் மரக்கட்டை மாதிரி இருப்பார்கள். ஆனால், பன்னிரண்டு வயதில், அதே முதுகெலும்பைத் தொட்டால், அவர்கள் சிலிர்த்துப் போவார்கள்." "இந்தப் பருவம்தான் ஆணையும் பெண்ணையும் தனித்தனியாய் பிரிக்கும் பருவம் ஆண்களுக்குக்கூட இந்த வயதில் மார்பகம் நெல்லிக்காய் அளவுக்கு பெருக்கும். காரணம், முழுமையான ஆண், முழுமையான பெண் என்று யாரும் கிடையாது. இரண்டு தன்மைகளில் எது மேலோட்குகிறதோ அது, பாலியலையும் அதன் உறுப்பையும் தீர்மா . து. உங்களுக்கு சிறுமிக்குரிய ஹார்மோன் சிறிது கூடு . . . இருக் ம் நமது உடம்பில், கோடிக்கணக்கான செல்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜீன் உள்ளது. உங்களுடைய ஜீனை வைத்து, உங்கள் முப்பட்டானின் ஜீனின் எண்ணிக்கையையும், இயல்பையும் கண்டு பிடித்து விடலாம். இப்போது, இந்த சுரபிகளை கட்டுப்படுத்துவது இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/239&oldid=762303" இலிருந்து மீள்விக்கப்பட்டது