பக்கம்:ஒத்தை வீடு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 புதைமண் ஜீன்கள் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகை 1ால், ஒரினச் சேர்க்கையும் ஒரு வகையில் மரபு வழிப் பிரச்சினை." "அப்படின்னா. இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாதோ?” 'முடியும். ஜீன் மட்டுமே ஒருவரது கேரக்டரை தீர்மானிப் பதில்லை. சுற்றுப்புறச் சூழல், சமூக அமைப்பு, இளமைக்கால அனுபவங்கள், சேரிடம், சேராயிடம் என்று பல காரணிகள் உள்ளன. ஒரே குடும்பத்தில் படிக்காதவர் நடைமுறை வேறு. படித்தவர் நடைமுறை வேறு. இல்லையா? ஆகையால், உடல் ஜீன்களோடு, நம் உடம்பிலுள்ள கோடிக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றிலும் உள்ள ஜீன்கள், சமூகச் சூழலையும், புதிய அனுபவங்களையும், பதிவு செய்கின்றன. இது உங்களுக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. மனம் அந்த பிரச்சினையை கிளப்பும் போது, நீ பாட்டுக்கு, எதை வேணுமென்றாலும் நினை. எனக்கு அதற்கும் சம்பந்தமில்லை என்ற அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்." "என்னை மாதிரி நிறைய பேர் இப்படி இருக்காங்களே மேடம்" "அப்படி இருப்பதா பேர் பண்ணிக்கிறாங்க இந்த "பயர் படம் வந்ததும் வந்தது, சமூகத்துல லெஸ்பியன் பெண்கள் அதிகமாக இருக்கிறது போலவும், மாமூல் பெண்கள் குறைவாய் இருப்பது போலவும் ஒரு மாயை ஏற்படுத்திவிட்டது. இயற்கை ஒரு பிரபஞ்ச இன்டர்நெட் மாதிரி. அதில் எல்லா நிகழ்வுகளும் உள்ளடங்கி உள்ளன. ஒரு ஆல விதை, எப்போது செடியாகி, மரமாகி, விழுதாகி, பல்கிப் பரவவேண்டும் என்பது, அந்த விதையிலேயே கணிப்பொறி திட்டங்களாய் உள்ளன. இந்த திட்ட நிகழ்வுகள் நிறைவு பெறுவதற்கு, அந்த விதையை விதைப்பதும், விதைத்ததை சுற்றி முள்வேலியைப் போடுவதும், உரமிடுவதும், காடுகளில் தானாகவும், நாடுகளில் நம்மாலும் நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு தவறும்போது, இந்த நிகழ்வுகளுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதேபோல், ஒரு குழந்தைக்குள் இருக்கும், மனிதனை அல்லது மனுஷியை - முழுமையாக வெளிக்கொணர, குடும்பத்தளமும், சமூகத்தளமும் ஒத்து வராதபோது, அந்தக் குழந்தை, பாலியல் திரிபு போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் மனிதனாகிறது. இவனுக்கு அல்லது இவளுக்கு பாலியல் மீறல், பழக்கமாகிறது. "மனிதனும் சமூகமும் இயற்கையின் விதிகளை மீறும்போது, இயற்கை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் போல் பிரம்படி கொடுக்கிறது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதுபோல், அதே இயற்கை மருந்துகளையும், வழிமுறைகளையும் காட்டுகிறது. காடுகளில் சாதுவான மிருகங்கள் அதிகமாகவும், கொடிய மிருகங்கள் குறைவாகவும் இருப்பது, இயற்கையின் சமச்சீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/240&oldid=762305" இலிருந்து மீள்விக்கப்பட்டது