பக்கம்:ஒத்தை வீடு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 புதைமண் "அவனது நடனம் ஊழிக்கூத்து மாதிரியான வேக வேகமான இயக்கம். அத்தனை கர்ணங்களையும் அடித்துக் காட்டுவானாம் எப்பாடி, தோளுல வலிக்குதே." "வலி போயிடும் அவனைப் பார்த்தால் நீ எப்படி ஆகிறாய்?" "அர்த்த நாரீஸ்வரனாய். அவன் எந்த முறைக்கும் சம்மதிப்பான்." இன்னொரு மின்குத்து. இன்னொரு எம்மா "செல்வா, வாய்விட்டுச் சொல்லு: மோகனனே! உன்னை மறக்க முடியலியே. மறக்க முடியவியே. இப்படி பல தடவை சொல்லுப் பார்க்கலாம்.” செல்வா, பல தடவை சொன்னான். ஒவ்வொரு தடவையும், மென்மைக்கும் வன்மைக்கும் இடையேயான மின் அதிர்ச்சியில், அவன் கரங்கள், காலோடு சேர்த்து குலுங்கின. "இன்னொரு தடவைச் சொல்லு. மோகனனை மறக்க முடியலியே. மனசுக்குள்ளே சொல்லு." "சொல்லமாட்டேன் வலிக்குது. வலிக்குது." டாக்டர். சத்தியா, செல்வாவை வழக்கப்படி எழுப்பிவிட்டாள். அவன் தூக்கத்தையும் துக்கத்தையும் கலைத்தவன்போல் எழுந்து, அவளை புன்முறுவலாய் பார்த்தான். சத்தியா, இறுதியாகச் சொல்வதுபோல் சொன்னாள். "இனிமேல் உனக்கு பிரச்சினை வராது. கவிதாவை, அவள் அண்ணனுக்கு கடிதம் எழுதச் சொல். ஓரினச் சேர்க்கைப் பற்றி: ஒரு வரிகூட வரக்கூடாது என்று கண்டிப்புடன் எழுதச் சொல். இனிமேல் எந்தக் கடிதம் வந்தாலும், அவள் மூலம்தான் உனக்கு வரவேண்டும் என்றும் அவளை எழுதச் சொல். அந்தக் கண்டிப்பில் அன்பு கணியவேண்டும். பாசம் பொங்க வேண்டும். காரணம், அவனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி ஆனவன்தான்." "அவனுக்கும் நீங்க சிகிச்சை.” "அது முற்றின கேஸ் என்னால மட்டுமில்லாமல், யாராலும் முடியாது. அவனாய் நினைத்தால்தான் உண்டு." "ஒரே ஒரு கேள்வி டாக்டர் அய்யப்பன் அப்படி பிறக்கலியா? ஆறுமுகம் இப்படி பிறக்கலியா? பிரம்மா என்கிற ஆண், பிள்ளைகளை பெறலியா? விஷ்ணு என்கிற ஆண் வடிவம் பிரம்மாவை பெற்றெடுக்கவில்லையா? இப்படில்லாம் அந்த பசங்க கேட்கிறாங்க. அதுக்கு நாம என்ன பதில் சொல்றது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/242&oldid=762307" இலிருந்து மீள்விக்கப்பட்டது