பக்கம்:ஒத்தை வீடு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 243 "சாமர்த்தியசாலி நீ அவங்க கேட்கிறாங்களோ இல்லையோ, நீ கேட்கிறே. மதங்கள் கடவுளுக்கு எதிரி புராணங்கள் மதங்களுக்கு வைரி. அர்ச்சகர்கள் இந்த மூன்றுக்கும் எதிரி. ஆனாலும், இந்த அய்யப்பன் விவகாரத்தில் ஒரு உள் அர்த்தமும் இருக்கிறது. பரந்தும் விரிந்தும் அண்டங்கோடிகளான நட்சத்திரங்களாய் ஆகி, அவையே ஒரு அணுவாக மாறி, நாடகம் நடத்தும் பிரும்மம் என்பது ஒன்றுதான். அது, ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை; அலியும் இல்லை. அந்த பெரிய ஒன்று, தன்னையே சின்னச் சின்ன ஒன்றுகளாக பெற்றெடுக்கிறது. பிறகு, இந்த சின்ன ஒன்றுகளை ஆண், பெண்ணாக பிரித்து இறப்பாலும் பிறப்பாலும் ஒழுங்குபடுத்துகிறது. பிரும்மத்தின் சிருஷ்டி வினோதம்தான் அய்யப்பன் என்று எடுத்துக்கொள்ளலாம். கொச்சைப்பட்டவர்கள் தான், அதைக் கொச்சைப்படுத்துவார்கள். எப்படியானாலும் அது புராணம். பொய்களிலே பெரிய பொய் புராணப் பொய்." செல்வா, அவளை மலைப்போடு பார்த்துவிட்டு, ஒரு கேள்வி கேட்டான். "பொதுவாய் சைக்காட்ரிஸ்ட், சைக்காலஸிஸ்ட் என்கிறவங்க பாதிக் கிராக்காத்தான் இருக்கிறாங்க. நீங்க... விதிவிலக்காய் இருக்கீங்களே” "நீங்க சொல்கிறவர்கள், தங்கள் உணர்வுகளை தாங்களே பரீட்சித்து பார்ப்பதால், ஏற்படுகிற கோளாறு அது. அதோட மனநோய் என்பது, யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம். என்னைப் பொறுத்த அளவில், நான் அரவிந்தர் ஆசிரமத்தில் தியானப் பயிற்சி பெற்றவள். பிரபஞ்சத்தை ஆராதிக்கும் வள்ளலாரின் அகவலை தினமும் படிப்பவள்." டாக்டர். சத்தியா, அவனது கேள்வி ஞானத் துடிப்பால் தொடர்ந்தாள். "உறுதியான உடம்பில் உறுதியான மனம் இருக்க முடியும். உறுதியான உடலுக்கு யோகாசனம், உடற்பயிற்சி போன்றவைகளை செய்ய வேண்டும். மயிலாப்பூரில், தேசிகாச்சாரியார் என்ற ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் கைநாடி பார்த்தே, ஒவ்வொருவர் உடல் வாகுக்கு ஏற்றபடி, சில யோகாசனப் பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பார். அங்கேயும் நான் பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். உடலை கழுவுவதுபோல் மனதையும் கழுவ வேண்டும். ஒரு விளக்கின் தீபத்தை பார்த்தல், அது நம் உறுப்புக்கள் ஒவ்வொன்றிலும் பொங்கி ஒளியிடுவதாய் கற்பித்தல் போன்ற பயிற்சிகளை செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் வாக்கிங்காவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/243&oldid=762308" இலிருந்து மீள்விக்கப்பட்டது