பக்கம்:ஒத்தை வீடு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 புதைமண் "நீ ஏற்றுக் கொண்டாயே, அதுவே போதும். இன்று முதல் நான் வெறும் செல்வா இல்லை. கவிஞன் செல்வா. சிறிது நாளில் பெருங்கவிக்கோ. அல்லது சிறுங்கவிக்கோ. கவிப்பேரரசு." 'கவிதை மனிதன் தோன்றிய காலத்திலிருந்து, நம்மை ஆள்கிறது. அந்த ஆளுமையின் வலிவுதான் கவிஞன். இவன் கவிதைக்கு அரசன், பேரரசன் என்பது அசல் பித்துக்குளித்தனம். சரி அது கிடக்கட்டும் உங்க கவிதையில என்னை பற்றி ஒரு வார்த்தை வரலியே? "இந்தக் கவிதையே, உனக்காக நான் எழுதியது. நீ மட்டும் இல்லையென்றால், நான் தேங்காய் சிதறலாய் சிதறி, பம்பாய்க்குப் போய் படாதபாடு பட்டிருப்பேன். அந்த டாக்டர் சத்தியாம்மா சொன்னது மாதிரி தாயான பிரும்மம், எனக்கு காதலியாக வந்திருக்கிறது." கவிதா, சிரிக்கப் போனாள். அதற்குள், செல்வாவின் தழுதழுத்த குரலும், பொங்கிய கண்ணிரும் அவள் சிரிப்பை கட்டிப்போட்டது. ஒன்றை ஒன்று பிடித்துக்கொண்டும், பிடிபட்டுக் கொண்டும் இருந்த, இருவரின் கரங்களும், இப்போது ஒன்றை ஒன்று கோர்த்துக் கொண்டன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/246&oldid=762311" இலிருந்து மீள்விக்கப்பட்டது