பக்கம்:ஒத்தை வீடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஒத்தை வீடு ஜோடியும் இருக்க முடியாது. மன்மதன் - ரதியே பெறாமைப்பட வேண்டும். தம்பியை விட இவள் இரண்டு விரல்கட்டைதான் உயரக் குறைவு. தம்பிக்குத் தடிப்போ, மடிப்போ இல்லாத தேகம். நாத்திக்கு வயிறு தெரியாத லாவகம். கொஞ்சம் ஒல்லியானாலும் மல்லி. கல்யாணமானதும் பூரிப்பில் தடிக்க வேண்டும். இன்னும் தடிக்கல. ஆனாலும் வளைவில்லாத மூக்கு. பயித்தங்காய் விரல்கள். அடர்ந்த முடி. படர்ந்த முகம் தம்பி மட்டும் லேகபட்டவனா. மாநிறம். என்றாலும் அதில் ஒரு பளபளப்பு. ராஜ பார்வை. கோணாத உடம்பு. கோடு போட்டது மாதிரி சமமான தோளு. எம்மாடி. என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே. சமையலறைக்குள் அல்லாடிய மனோகரை, நீ மொதல்ல வெளில போடா. என்று மொதலுக்கு இரட்டை அழுத்தம் கொடுத்தாள். அவன் போனதும், மாவு பிசைந்த சங்கரியை, அப்படியே துக்கி, இரண்டு கைகளையும் குவித்து, குவித்துப் பிடித்தபடியே இழுத்து, வாஷ் பேசினுக்குக் கொண்டு வந்தாள். நாத்தியின் கைகளைக் கழுவி விட்டாள். தலை முடியை ஒதுக்கி விட்டாள். முகத்தை ஈரக்கையால் பாலீஷ் போட்டாள். பின்னர் அவள் முதுகைத் தள்ளித் தள்ளி, மாடிப் படிகளின் முனையில் விட்டாள். அவள் படியேறி மேலே மறைந்த பிறகுதான், சமையலறைக்குள் வந்தாள். அவளுக்கு முன்னால், அம்மா, அங்கே நின்றாள். மகள் வந்ததும் வராததுமாக அவள் காதைக் கடித்தாள். "ஒரு மாசம் கழிச்சு. புருசன் வந்திருக்கான். அவள் முகத்துக்குப் பெளடர் போடல. கண்ணுல் ஒரு கிறக்கம் இல்ல. வாயில ஒரு சின்னச் சிரிப்புக்கூட இல்ல. இவள்ளாம் ஒரு பொம்புளையாம். சரியான ஆம்புளப் பிறவி. இந்த மாதிரி சமயத்துல. அந்தப் பாவி மனுஷன் வெளியூர்ல மூணு நாள் தங்கிட்டு வந்தாக்கூட போதும். நான் முகத்த அலம்பி. பொட்டு வச்சு. பூ முடிச்சு." "என்னம்மா. நீ. நான் ஒன் மகள் என்கிட்ட போயி..." "ஆபத்துக்குத் தோசம் இல்லடி." "மொதல்ல இங்கிருந்து போம்மா." அம்மா போய்விட்டாள். ஆனால் அவள் சொன்னது போகவில்லை. ஒரு வேளை அம்மா நினைத்தது மாதிரியே இருக்குமோ. எப்படிக் கண்டுபிடிக்கலாம். கைகளை சொடக்குப் போட்ட காந்தா மணிக்கு, அவர்களது அந்தரங்கத்தைக் கண்டு பிடிக்க ஒரு வழி கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/25&oldid=762315" இலிருந்து மீள்விக்கப்பட்டது