பக்கம்:ஒத்தை வீடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஒத்தை வீடு மாமியார் சவாலிட்டது. அவனது பாஸ்போர்ட் விசாரணைக்கு வந்த போலிஸ்காரர் நூறு ரூபாயோடு திரும்பிப்போனது, டெலி போன் பில், கரெண்ட் பில், போன்ற அனைத்து விவகாரங்களையும் அலசிவிட்டார்கள். எனவே இப்போ பேச்சுக்கு வேலை இல்லை. ஆனாலும் பேசினான். "சீக்கிரமா வரப்படாதா. நான் துரங்கின பிறகு வர்லாம் என்கிற மாதிரி வாரே." "அவர்கள தூங்க வச்சுட்டு வாரேன்." இருவரும் சொல்லி வைத்தது போல் கட்டிலில் ஒரே சமயத்தில் விழுந்தார்கள். விழுந்து எழுந்தவளை, விழுந்து கிடந்தவன் கையைப் பிடித்து இழுத்து, தன் பக்கமாய்ச் சரித்தான். பிறகு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவளை தன் மடிமேல் கிடத்தினான். தலையைச் செல்லமாகக் குட்டினான். முகத்தை அவளை நோக்கிக் குனிந்தான். அரைவளைவாய் வளைந்து, அவள் முகம் நோக்கி தன் முகத்தைக் கொக்கு போல் நீட்டினான். அவள் உடலில் விலாப் பக்கங்களில் நீள வாக்கில் கிடந்த கரங்களை, தனது கரங்களால், அழுத்திப் பிடித்தான். கட்டில் மெத்தையில் உடல் தடயங்கள் விழும்படி இறுக்கிப் பிடித்தான். என்றாலும், ஒரு நிமிடத்தில் எதையோ நினைத்துக் கொண்டவன்போல், "மறந்துட்டேன் பாரு" என்று கூறியபடியே முகத்தை நிமிர்த்தினான். கைப்பிடிகளை அகற்றினான். மடியில் கிடந்தவளை, மென்மையாய் புரட்டி, கட்டிலில் ஒருகளித்துப் போட்டு விட்டு, எழுந்தான். சுவர் அலமாரியைத் திறந்து, ஒரு வெள்ளைப் பெட்டியை எடுத்து, அவள் பக்கம் வைத்தான். ஜிகினாக் காகிதம் சுற்றிய அந்தக் காகிதப் பேழையை எப்படித் திறப்பது என்று அவள் அதை அங்கு மிங்குமாய்ப் புரட்டியபோது, மனோகர் குளியல் அறைக்குள் போனான். சங்கரி, சந்தன நிறத்தில் சதுர வடிவான, அந்தப் பெட்டியை வியாபித்த ஜிகினாக் காகிதத்தைக் கிழிக்கப் போனாள். கைதான் வழுக்கியது. பிறகு பல்லால் கடித்து, ஒரு பக்கத்தை ஒட்டையாக்கி, அந்த ஜிகினாவை அக்கு வேறு ஆணி வேறாக்கினாள். ஒன்றின் ஒன்றாய்க் கெளவிய பெட்டியை பலவந்தமாக உடைத்து, கெளவப்பட்ட பெட்டியைப் பார்வையிட்ாள். வண்ணக் காகிதத் துண்டுகளுக்கு மத்தியில் ஒரு முத்துமாலை. வெள்ளை நிற வாளிப்போடு, ஒளி வடிவமாய் மின்னியது. முத்துக்களுக்கு இடையிடையே முடிச்சுப் போடப்பட்ட தங்கச் சரம். அவள் முத்து மாலையை தூக்கிப் பிடித்த போது, மனோகர் குளியல் அறையில் இருந்து திரும்பினான். அவன் முகத்தில் ஆங்காங்கே குமிழிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/27&oldid=762317" இலிருந்து மீள்விக்கப்பட்டது