பக்கம்:ஒத்தை வீடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 29 "நோ. நோ. காஸ்ட்லி நைட்டி. டில்லியில் ஸ்பெஷலாய் ஆர்டர் கொடுத்து தயாரித்த நைட்டியாக்கும். கொஞ்சம் போட்டுக் குவியாம். சேலை, பாவாடை ஜாக்கெட் அனாவசியங்களைக் கழட்டிட்டு இதப் போட்டுக்கோம்மா... இதுதான் நல்ல பெண்டாட்டிக்கு அடையாளமாம்." "நான் கெட்ட பெண்டாட்டியாவே இருந்துட்டுப் போறேன்." "கெட்ட மனைவியைத் திருத்த வேண்டியது நல்ல கணவனுக்கு அடையாளமாச்சே." மனோகர், சங்கரியை மல்லாக்கத் தள்ளி, அவள் புடவையை உருவப் போனான். உருவி விட்டான். அவள் முதுகிற்கும், கட்டில் மெத்தைக்கும் இடையில் சிக்கிய புடவையை, அசல் துச்சாதனன் போலவே இழுத்தான். கலர்ப் பாவாடையோடு கிடந்தவள், கட்டிலில் இருந்து அவசர அவசரமாய்த் தரையில் விழுந்து எழுந்தாள். முன்பக்க பட்டன்கள் கொண்ட அந்த நைட்டியைத் தூக்கிக் கொண்டு குளியல் அறைக்குள் ஓடினாள். ஐந்தாறு நிமிடங்கள் கழித்து திரும்பிவந்த சங்கரி, அந்த நைட்டியில் ஒளிர் விட்டாள். விளக்கு வெளிச்சம், சதுரக் கண்ணாடிகளில் பிரதிபலித்து, அவளைச் சுற்றி ஒளிவட்டங்கள் போட்டன. பவளக் கம்மலில் பாய்ந்த ஒளிக் கற்றைகள், பாளம் பாளமாய் மின்னின. மனோகர், எழுந்து போய் அவளைப் பற்றிக் கொண்டான். அவனது முன்பாதியும், இவளது பின் பாதியும் ஒட்டிக் கொண்டன. கட்டிலில் டப்பென்று விழுந்தனர். அவன்பிடி வழக்கத்திற்கு மாறாக, பலமாக இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டாள். ஆனந்தப்பட்டாள். முட்டை பாயாசத்தின் வேலையா. சிரித்துக் கொண்டாள். அவனை சிக்கெனப் பிடித்துக் கொண்டாள். மனோகரின் பிடி தளர்ந்தது. இரும்பாய்ப் பற்றிய கரங்கள், துரும்பாய்த் துவண்டன. சிறிது நேரம் செயலற்ற சூன்யம். ஒருமை ரெண்டுபட்ட வெறுமை. சிறிது நேரத்திற்குப் பிறகு, மனோகர் மீண்டும் அவளைப் பற்றினான். அவள் புரிந்து கொண்டாள். அது போலியான பிடி. பழக்கப்பட்டுப் போன வழக்கமான பிடி உணர்ச்சியற்ற ஒப்புப் பிடி இயங்குகிறேன் என்று சொல்லாமல் ஏதோ இருக்கிறேன் என்பதைக் காட்டும் வீம்புப் பிடி. வெறும் சங்கரிக்குத், தாபம் போய் கோபம் வந்தது. ஆசை பொங்கிய கண்களை, அழுகை படையெடுத்தது. கிறங்கிய கண்கள் தங்களுக்குத் தாங்களே இரங்கிக் கொண்டன. நாகலிங்கப் பூவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/30&oldid=762321" இலிருந்து மீள்விக்கப்பட்டது