பக்கம்:ஒத்தை வீடு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 31 "நாம் நினைத்தபடியெல்லாம் உடம்பு கேட்குதா என்ன.." "ஆனாலும் நீ. கத்த மோசம்." சங்கரி, மேற்கொண்டு பேசவில்லை. அவனுக்கு ஒரு சாக்கைக் கொடுத்த திருப்தியில், கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவனுக்காக சிலுவை சுமப்பது போலான தாலியை, உருட்டி விட்டாள். லிங்கப்படம் போட்ட அந்த மாங்கல்யம். கட்டில் மெத்தையில், நோய் நின்று, அவள் கழுத்துக் குழியை முள்ளாய்க் குத்தியது. உடனே அவள் அந்த தாலித் தங்கத்தை பின் பக்கமாய்க் கொண்டுவந்து, பிடறியில் விட்டுவிட்டு, நெஞ்சில் வெறுங் கயிரைப் படரவிட்டாள். இருவரும் விலகிக் கிடந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும், ஒரு ஊழியானது. நூற்றுக்கணக்கான நிமிடங்களின் ஊழ்வலியில் உழன்று கிடந்தார்கள். அவன் புரளும்போது அவளும், அவள் புரளும்போது அவனும் அசைவற்றுக் கிடந்தார்கள். ஏதோ ஒரு வகையில் கட்டில் அசைந்தது. ஒவ்வொரு வேளையும், ஒரே ஒரு பக்கமாய் ஆடியது. சங்கரியால்; தூக்க நாடகத்தைத் தொடர முடியவில்லை. தலையை ஒருச்சாய்ந்து அவனைப் பார்த்தாள். துரங்கத்தான் செய்தான். இரண்டு கரங்களையும் வளை கோடாய் வளைத்துப் போட்டு, அடியற்ற மரம் போல் குப்புறக் கிடந்தான். சங்கரி, எழுந்தாள். பின் கதவைத் திறந்து பால்கனிப் பக்கம் வந்தாள். கதவோடு கதவாய்ச் சாய்ந்தாள். சுவரோடு சுவராக நின்றாள். உடல் வேகம் எப்போதோ நின்று விட்டாலும் மனோவேகம் நின்ற பாடில்லை. திருமணமான இந்த மூன்று மாத காலத்தில், ஐம்பது இரவுகள், முழுமையாய் வந்திருக்கும். அந்த இரவுகள் ஒரு தடவை கூட விடியவில்லை. இருட்டில் விளையாடிப் பிரகாசிக்க முடியவில்லை. அம்மா எழுதிக் கேட்கிறாள். ஆகலையா என்று. அப்பா பூசகமாய் எழுதுகிறார். எதுவானாலும் எழுதிப் போடு என்று, அண்ணி வருத்தப்படுகிறாள். மாமியார், ஆடுகிறாள். இவள், அவமானம் தாங்காமல் தலை குனிகிறாள். ஒரு இரவா. இரண்டு இரவா. ஐம்பது இரவுகளும் துறவுகள். இரை தின்ன நினைத்துத் துரண்டிலில் மாட்டிய மீன்கதை. அந்த மீனாவது அப்போதே செத்துப் போகும். சங்கரிக்குத் தன்னையறியாமலே முதலிரவின் நினைப்பு வந்தது அவளுக்கும். எதிர்மறைவில் சொல்லப்பேனால், மறக்க முடியாத இரவு தான். அவள் நானக் கண்களோடு, தத்தித் தத்தி நடத்தாள் இரு கரங்களிலும் பால் குவளையோடு வருகிறாள் அவனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/32&oldid=762323" இலிருந்து மீள்விக்கப்பட்டது