பக்கம்:ஒத்தை வீடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஒத்தை வீடு கவிழ்த்து பார்க்கிறாள். பார்த்துப் பார்த்து நிற்கிறாள். நின்று நின்று, அவனை நோக்கி நடக்கிறாள். அவள், தலை கவிழ்ந்து, கண்மூடி, பார்வையற்றவள் போல், அவன் கரமிருக்கும் திசையை அனுமானித்து குவளையை நீட்டுகிறாள். அவன், அதை வாங்கி கட்டில் சட்டத்தில் வைத்துவிட்டு, அவளைப் பிடிக்கிறான். தோளில் சாய்க்கிறான். எலும்புகளை நொறுக்குவது போல் அழுந்தப் பற்றுகிறான். நெருக்குகிறான். கால் திமிடமோ அரை நிமிடமோ. அண்ட கோடி வேகம் கொள்கிறான். அவளைக் கடிக்கிறான். அவள் பயந்து போகிறாள். அவனிடம், நளினத்தை எதிர்பார்த்தவள் நடுங்கிப் போகிறாள். அந்த நடுக்கத்தில் கீழே விழாமல் இருப்பதற்கு, அவனைப் பற்றுக்கோலாய் பற்றுகிறாள். அதுவே ஆசையாகிறது. மோகமாகிறது. வேகவேக மான பிடியாகிறது. அரை நிமிடத்தில் அவன் பிடி தளர்கிறது. நிறுத்தப்பட்ட மின் விசிறி போல் அவன் உடல் சுழற்சி மெல்ல மெல்ல நிற்கிறது. எந்த விகற்பமும் இல்லாமல் நிற்பவளை, கட்டிலில் உட்கார வைக்கிறான். அவள் தோளில் தன் கரங்களை முன் சடை போல் தொங்கப் போட்டுக் கேட்கிறான். என்னைப் பிடித்திருக்கா...' என்கிறான். அவள் நாணிக் கோணி தலையாட்டுகிறாள். நீள வாக்கில் முகத்தை முன்னும் பின்னும் ஆட்டுவது தெரியாமல் ஆட்டுகிறாள். காது வளையங்கள் சுழலத் தலையாட்டுகிறாள்; உடனே, மனோகர் தன் கதையைச் சுருக்கமாகச் சொல்லுகிறான். எடுத்த எடுப்பிலேயே கிளாஸ் ஒன் ஆபீஸராம். கை நிறையச் சம்பளமாம் கார் வாங்கலாமா. மனை வாங்கலாமா. என்று யோசிக்கின்றானாம். அவள் சொன்னபடி நடப்பானாம். அம்மா பித்துக்குளியாம். அவளிடம், நாத்தனார் போல்தான் நடப்பாளாம். அவளை, இவன் பொருட்டுப் பொறுத்துக் கொள்ளணுமாம். ஆனால் அவளது கிராமத்து நாத்தனார். இவளை அனுப்பி வைத்தாளே காந்தாமணி, அவள் அம்மாவாய் நடப்பாளாம். இவளை, அவனுக்குப் பிடித்துப் போயிற்றாம். இவளைப் பேசச் சொல்கிறான். வாயை, பலவந் தமாகப் பிரிக்கிறான். அவள் பேசாவிட்டால், தான் பேசப் போவதில்லை என்கிறான். பழைய நினைவுகளில் மூழ்கி, வெறுந் சிப்பிகளை எடுத்த படியே, சங்கரி, சுவரில் இருந்து தாவி, பால்கனிக்கு வருகிறாள் குத்துக் காலிட்டு பால்கனியின் விளிம்புச்சுவரில் முகம் போட்டு, தான் பேசியதை நினைத்துப் பார்க்கிறாள். அழுகையும் வருகிறது. சிரிப்பும் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/33&oldid=762324" இலிருந்து மீள்விக்கப்பட்டது