பக்கம்:ஒத்தை வீடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒத்தை வீடு காந்தாமணி, மெல்ல நகர்ந்து சமையலறை கதவுச் சட்டத்தில் முதுகைப் போட் டி, பூஜை அறையில் நின்றவளைப் பூடகமாகப் பார்த்தாள். த லயில் பூக்கள் கசங்கி இருந்தன. ஆனால் அவள் எதிர்பார்த்தது போல், அவை கசங்கிக் கசங்கிக் கூழாகி, அவள் தலைமுழுக்க அப்பவில்லை. எள் பிசங்குவது போல் ஈரப்பசை காட்டவில்லை. புடவையும், மடிப்புக் கலையாமல் மதப்பாகத் தெரிகிறது. ண்ணிக்காரிக்கு லேசாகப் புரிவதுபோல் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல், பூஜை அறையில் இருந்து வெளிப்பட்ட சங்கரி, அண்ணியை தலைதுாக்கிப் பார்த்தாளே தவிர, நாணத்தால் கண்சிவந்து, கண்களைக் கீழ்நோக்கி கவிழ்த்து மேல் நோக்கிப் பார்க்கவில்லை. உப்புச் சப்பற்ற சிரிப்பை உதிர்த்தாளே தவிர, குறுஞ்சிரிப்பாய், குறிப்புணர்த்தும் சிரிப்பாய்ச் சிரிக்கவில்லை. அண்ணியிடம் பேசாமலே சமையலறைக்குள் போனாள். அங்கே பாத்திரங்களோடு மோதிக் கொண்டிருந்த மாமியார், மருமகளுக்கு ஆணை இட்டாள். "பால் திரிஞ்சிட்டு. உமா வீட்ல இருந்து ஒரு டம்ளர் பால் வாங்கிட்டு வா. புருஷனுக்குக் காபி போட்டுக் கொடுக்கணுங்கற கரிசனங்கூட இல்ல." சங்கரி, மடமடவென்று வெளியே வந்து, விஷயத்தை அண்ணியிடம் சொல்லிவிட்டு, மீண்டும் சமயலறைக்குள் வந்தாள். காந்தாமணி, முற்றத்திற்குப் போய், எதிர்வீட்டு உச்சாணி பால்கனியில் ஒய்யாரமாய் நின்ற உமாவிடம், நின்ற இடத்தில் நின்றபடியே, நாத்தியார் சொன்னதை வெளிப்படுத்தினாள் "எங்க வீட்டுப் பாலு கெட்டுப் போச்சு. ஒங்க வீட்ல இருந்து கொஞ்சம் பால் வேணும்." "அதுக்கென்ன. இப்பவே." பால்கனியில் ஒரு பூச்செடியைப் பதியம் வைப்பது போல் நின்ற உமா, அங்கிருந்து மறைந்து, ஐந்தாவது நிமிடம் அந்த வீட்டிற்குள் வந்தாள். குலுக்கி, மினுக்கி சந்தோஷமாகவே வந்தாள். அவளை, மாமியார் படுத்துவதாகக் கருதப்படும் கொடுமைகளை, அவள் இறக்கி வைப்பதற்கு, இந்த சொர்ணம்மா தான் ஒரு சுமைதாங்கிக் கல். நேற்றிரவு புருஷனிடம் சேரவிடாமல் மாமியார் தன்னைப் படுத்திய பாட்டை, சொர்ணம்மாவிடம் சொல்வதற்காகவும் வந்தவள்போல் வந்தாள் "பெரியம்மா. பெரியம்மா” என்று குரலிட்டபடியே போனவளின் கையிலிருந்த பால் டம்ளரை சங்கரி வந்து வாங்கிக் கொண்டாள். சங்கரி இருந்தாலும் பரவாயில்லை இந்த வயதிலும் பிரா போடும் மாமியாரைப் பற்றிச் சொர்ணம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/37&oldid=762328" இலிருந்து மீள்விக்கப்பட்டது