பக்கம்:ஒத்தை வீடு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 41 கூனிக் குறுக்கியபடியே, ஆகாயத்தில் கடவுள் இருப்பது போலவும், அவரிடம் முறையிடுவது போலவும் சொன்னாள். "அவரால முடியலேயே. முடியலேயே." சங்கரி விக்கியும், திக்கியும், விம்மியும், துக்கித்தும் அடை மழை துறலானது போல்ஏங்கியபோது, உமா நெகிழ்ந்து போனாள். அவரால முடியலேயே என்று இவள் கோபமாய்ச் சொல்லவில்லை; குற்றஞ்சாட்டவில்லை. அனுதாபமாய்ச் சொல்கிறாள். இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தியா? உமாவுக்கு, மனம் கேட்கவில்லை. ஆனாலும் முக்கால் வாசி அனுதாபம் கொண்ட மனதின் துனியில் ஒரு அற்ப சந்தோஷமும் ஏற்பட்டது. அவள் மீது இவள் கொண்ட பழைய பகையற்ற பொறாமை, புதிய பெருமிதமாய் உருமாறியது. இந்த உமாவின் மாமியார் எதற்கெடுத்தாலும், இருந்தால், சங்கரி மாதிரி இருக்கணும். இங்கேயும் இருக்காளே. என்று சாடை மாடையாகப் பேசுவது உண்டு. இந்த ஒப்பீட்டுப் போராட்டத்தின் தோற்றாலும் இறுதிப்போரில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக, உமா எழுந்தாள். ஒரு உளவாளியின் சாதனைத் திருப்தியுடன், சரிம்மா. இது பெரிய பிரச்சினை. ஆற அமர அப்புறமாய்ப் பேசுவோம் எங்க வீட்டுக் கொள்ளிக் கண்ணி, இதுக்கு GLDGaు இருந்தால் எரிச்சிடுவாள். என்று சொன்னபடியே, சங்கரியைத் தனிமையில் விட்டு விட்டு, கொல்லையைத் தாண்டி, அந்த வீட்டின் முற்றத்திற்கு வந்தாள். அவளுக்காகவே காத்திருந்த காந்தாமணிடம், "ஒன்றும் நடக்கலியாம் என்று பொதுப்படையாய் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். காந்தாமணி, கொதித்துப் போனாள் இவள் ஆம்பிளப் பிறவிதான். நேத்துக்கூட என் தம்பி, உமா புருஷன்கிட்ட டில்லி பொண்ணுகளப் பத்தி எப்படியெல்லாம் பேசினான். கோளாறு இவகிட்டதான் இருக்கும். படிக்கும்போது எவனயாவது விரும்பிட்டு சினிமாவுல வரது மாதிரி, என் தம்பிக்கிட்ட ஏடாகூடமா நடந்தாலும் நடந்திருப்பாள். இந்த விவகாரம், சாண் ஏறுன்னா முழம் சறுக்குகிற கதையர்ச்சே அம்மா கிட்ட சொன்னால், அவ்வளவுதான். தம்பிகிட்ட பேசவும் முடியாது. கிணறு வெட்ட பூதம் கிளம்புதே ராசியில்லாத நான், அவனுக்குப் பொண்ணு பார்த்திருக்கக்கூடாது ராசியிருந்தால், அந்த மனுஷன் அ ப் ப டி ம | ர ைட ப் பு ல ச | வ | ர |ா அதுவும் மு னு வருஷத்துக்குள்ளே.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/42&oldid=762334" இலிருந்து மீள்விக்கப்பட்டது