44
ஒத்தை வீடு
நாய்கள், அத்தனை அமர்க்களத்திலும், ஒட்டிக் கொண்டன அவனைப் பார்த்து பரிகசிப்பதுபோல் பல்லிளித்தன.
மனோகருக்கு, மனைவியைப் பாம்பென்று ஒதுக்கவும் முடியவில்லை. பழுதென்று சேர்க்கவும் முடியவில்லை... நேற்று அவள், இந்திரனிடம் பேசியவிதம், அது சாதாரண நட்பாகத் தெரியவில்லை. இவன் பயிற்சிக்காக புதுடில்லி போவது வரை, இந்திரனின் அசட்டுக் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளிப்பவள், நேற்றோ, இருவரும் ஒருவரானதுபோல் பேசுகிறாள். ஒரு மாத காலத்தில் அப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டிருக்குமோ...? நேற்றைய ராத்திரியில், பால்கனியில் அவளுக்கு என்ன வேலை? இருக்காது... படுக்கையறையில் பெருந்தன்மையாய் நடந்து கொண்டவள், வெறுமையாய் உட்கார்ந்த தன்னை, மடியில் கிடத்தி, குழந்தையைத் தாலாட்டுவதுபோல் ஆட்டியவள்... அவனுக்கு தோல்வியை இல்லை என்பதுபோல் சர்வசாதாரணமாக நடந்து கொண்டவள்... அத்தனை ஏமாற்றத்திலும் அவளால் எப்படி சாதாரணமாக நடக்க முடிகிறது...?
காலப்போக்கில்... சரியாகிவிடும் என்ற நம்பிக்கையா அல்லது ஒருவேளை... ஒருவேளை... ‘நீ... இல்லாட்டால் வேறு ஆளே கிடையாதா’ என்று கேட்காமல் கேட்கிறாளா... எப்படியோ... அவளைச் சொல்லிக் குற்றமில்லை... கோளாறு என் பக்கம் அதன் வெளிப்பாடு அவள் பக்கம்... இந்தச் சித்திரவதையை எத்தனை நாள் பொறுப்பது? அவள்முன் புழுவாய்த் துடிப்பதைவிடச் செத்துவிடலாம்... வராத சாவை வருந்த அழைத்துக் கொள்ளலாம்... தன்னைத் தானே கொலை செய்து கொள்ளலாம்... இந்த ஈன வாழ்க்கை வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...
மனோகர், எழுந்தான். பேருந்துகளில் மோதப் போகிறவன் போல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்... அண்ணாந்து ஆகாயத்தை வெறுமையாய்ப் பார்த்தபடி... ஆட்டோவில் மோதினான்... எதிர்ப்பட்ட ஒரு இளம் பெண் முகத்தில் முகமிடித்தான். அவள், பயந்து போய் ஒதுங்கியபோது, ஒரு காய்கறிக்கார கிழவி ‘பொலிகாளப் பயலுக... வந்துட்டானுக...’ என்று. திட்டியதைக் கேட்க, அவனுக்குச் சிறிது ஆறுதலாக இருந்தது... ஆனாலும் இப்போது சாலையின் ஓரமாகவே நடந்தான்... தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு நடந்தவன், சங்கரியை, விட்டுவிட்டு, டில்லி நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தினான்.
சங்கரியை, சந்திக்க வேண்டிய வகையில் சந்திப்பதற்காக, சென்னையிலும், டில்லியிலும் பரிகாரம் தேடத்தான் செய்தான் சென்னையில் பரிச்சயமான மருந்துக் கடையில், ஒரு விளம்பரப்