பக்கம்:ஒத்தை வீடு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 4.7 கொங்கணர், புலிப்பானி, வரமுனி என்கிற பதினெட்டுச் சித்தர்களின் பரம்பரை இன்னும் இருக்கத்தான் செய்யுது. ஆனால், பத்திரிகைகளுல படமா சிரிக்கிறவங்க. இந்தப் பரம்பரையின் பெயரைக் கெடுக்கிறதுக்குன்னே பிறப்பெடுத்தவங்க. இவங்க சித்தர் முன்னோர்களின் உள் முகம் தெரியாத வான்கோழிகள். போகட்டும் உடம்புக்கு என்ன செய்யுது ?" மனோகருக்கு ஆன்மீக மனிதராய்த் தோன்றும் அவரிடம், அற்ப விஷயத்தை எப்படிக் கேட்பது என்று புரியவில்லை. பிடி கெர்டுக்காமலே சொன்னான். "வயிற்றுக் கோளாறு. வாயுத் தொல்லை. இங்கிலீஸ் மருந்து, கேட்கல." "சரி. எழுந்து கைகால்களை உதறிட்டு. நிமிர்ந்து உட்காருங்க. இல்லாத கூனை ஏன் போடுறே?" மனோகர், மனதை உதறிப்போடப் போவது போல், உதறிவிட்டு உட்கார்ந்தான். வைத்தியர் ஜெகன்னாதன், அவன் நீட்டிய கையின் மணிக்கட்டுக்கு கீழே, தனது மூன்று விரல்களைப் பதித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒவ்வொரு விரலாய் எடுத்தெடுத்து, மீண்டும் பதித்தார். திடுக்கிட்டவராய் அவனைப் பார்த்தார். கண்டதைச் சொன்னார். இப்போது அவனை ஒருமையிலேயே பேசினார். "என்னப்பா. இது. நாதம் பேசலியே." "அப்படின்னா.” "அடக் கடவுளே. இது, தெரியாமல் வந்த கோளாறு. நாதம் என்றால் ஒலி என்று மட்டும் அர்த்தமில்லை. பருவம் வந்ததும் ஒருத்தரோட குரலை ஆண், பெண் இயல்புக்கு தக்கபடி மாற்றி அமைக்கும் நாதாந்தம் என்றும் அர்த்தம். பதினான்கு பதினாறு வயதில், ஆண்குரல். பெண்குரல் என்று அடையாளம் காண முடிகிறதே. அந்த மகரக்கட்டு அடையாளத்தை ஆணுக்குத் தருவது, விந்து பெண்ணுக்குத் தருவது, நாதம். சகல் உயிர்களுக்கும் ஆதாரமான பெரும்பொருள் மானுடத்தில் ஆணுக்குச் சுரப்பது விந்து. பெண்ணுக்குச் சுரப்பது நாதம். ஆணையும் பெண்ணையும் எப்படிப் பொதுப்படையாய் மனிதன்னு அழைக்கிறோமோ. அப்படி விந்துவையும், நாதத்தையும் நாதமுன்னு அழைப்பதுண்டு இதனால்தான் கோடிக்கணக்கான உயிரணுக்களைக் கொண்ட விந்தையும், லட்சோப லட்சம் முட்டைகளில் ஒன்றைக் கருப்பையில் சேர்க்கும் நாதத்தையும், பரம் பொருளின் சொரூபமாய் நினைக்கிறோம் இதனால்தான் நாதவிந்துக் கலாதி நமோ என்றார் அருணகிரியார் நாதாந்த ஜோதி என்றார் ஞானமுள்ள தேகமெல்லாம் நாதவிந்தின் கூறு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/48&oldid=762340" இலிருந்து மீள்விக்கப்பட்டது