பக்கம்:ஒத்தை வீடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 51 பிரம்மச்சரியம். தியானம். யோகாசனம். அடுத்த தடவை வரும்போது உனக்கும் சொல்லித்தாறேன். அதுக்கு முன்னால ஒன்று சொல்றேன். கவனமாய்க் கேள். உச்சம் வரும்போது மூக்கின் நுனியைப் பார். புருவ மத்தியைப் பார். சரி போய் வா." மனோகர், அங்கேயே இருக்கப் போவதுபோல் நின்றான். வைத்தியர் நாற்காலியில் உட்கார்ந்து பதார்த்த குண சிந்தாமணிப் புத்தகத்தைப் புரட்டியபோது, அவன், அவர் தனக்கு மேற்கோள் காட்டப் போவதாய் அனுமானித்து அவரைப் பார்த்தான். என்றாலும், வைத்தியர் அந்தப் புத்தகத்தில் மூழ்கியபோது, மனோகர், மனதுள் மூழ்கியபடியே, இப்போது நடந்தான். மூக்கு நுனியைப் பார்த்தபடியே தொடர்ந்தான். போகப் போக, அந்த வைத்தியசாலையில் கிடைத்த நிம்மதி கருங்கியது. சுருங்கிச் சுருங்கி, சுருக்கம் தெரியாமலே போய் விட்டது. மனதில் மீண்டும் குழப்பம். இந்த மருந்து பலிக்கா விட்டால் எந்த மருந்தும் பலிக்காது. என்றாரே. ஒருவேளை பலிக்காமல் போனால், செய்முறைப் பழக்கம் உடலின் சமச்சீர் நிலையைப் பாதிக்கும். என்றாரே. பாதித்திருக்குமோ. நாத விந்துக்கு அவ்வளவு மகிமையா. குப்புறப் படுத்த பழைய நாட்கள், பகை நாட்களே. போனது போனதுதானோ. குரல் உடைந்துபோனதற்கு, அதுதான் காரணமோ. இதனால்தான் டெலிபோனில் வரும் சிலர், அவனை அடையாளம் தெரியாமலேயே மேடம் என்கிறார்களோ, மேடமா. மடமா. மோசம் போனேனே. நாசமானேனே. .5 மனோகர், வீட்டுக்குத் திரும்பியபோது, முற்றத்தில் அம்மா. திண்ணை விளிம்பில் அக்கா. திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி சங்கரி அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும்; அக்கா முகத்தில் புருவச் சுழிப்புகள். அவள் முகத்தில் கண்ணிர் வெள்ளம். மனோகர் அதட்டினான் தேக்கிவைத்த வெறுப்பையெல்லாம் சினமாகக் கக்கினான் "என்ன இதெல்லாம் " அக்காக்காரி கரங்களைப் பிசைந்தபோது, அம்மாக்காரி அசுரக் கோபத்துடன் பதிலளித்தாள் மருமகளைச் சுற்றி மானசீகமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/52&oldid=762345" இலிருந்து மீள்விக்கப்பட்டது