பக்கம்:ஒத்தை வீடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஒத்தை வீடு கேளுங்க... என்கிட்ட கேட்டால் மரியாதை போயிடும். என்றாள். பிறகு, தான் சொன்ன வார்த்தைகளைத் தானே நம்பமுடியாமல், சிறிது கால்களைத் தேய்த்தபடியே நின்றுவிட்டு, மாடிக்கு வந்தவள்தான். சிற்றுண்டியும் சாப்பிடவில்லை. மத்தியானச் சாப்பாடும் வரவும் இல்லை. இவள் போகவும் இல்லை. பசிமயக்கம் எடுத்தாலும் அந்த மயக்கத்தை ஏதோ ஒரு விதச் சூன்யம் விழுங்கி விட்டது. மனதில் இருக்கும் பாரத்தை இறக்கிப் போட, உமாவும் வருவதில்லை. உறவோ பகையோ அற்ற நிலைமை அன்று அவள் கணவனிடம் அவர் அப்படிப்பட்டவர் இல்லை. ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டார். தப்பா நினைக்காதிங்க... என்று சொன்னபோது, இந்திரன் போட்ட பார்வை சரியாகப் படவில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியுமென்று அவன் சொன்ன பதில் சொன்ன தோரணையும், என்னவோ போல் இருந்தது. யானை சேறில் சிக்கினால் தவளை கூடக் கிண்டல் செய்யுமாம். சங்கரி தனிமையில் தவித்தாள். இந்த உலகில் அவள் மட்டுமே தனித்திருப்பதாய் ஒரு அனுமானம். சபிக்கப்பட்டது போன்ற உறுத்தல். சாப விமோசனம் எப்போ கிடைக்குமோ என்ற ஏக்கம். திடீரென்று, அவள் காதில் ஏதோ உரசுவதுபோல் தோன்றியது. திடுக்கிட்டுக் கண்விழித்தால், ஒரு இலைப் பொட்டலம் மல்லிகைப் பூவாய் துருத்திக் கொண்டிருந்தது. ஏறிட்டுப் பார்த்தால், மனோகர்! அவளுக்கு முதுகு காட்டி வீராப்பாய் நின்றான். அந்தப் பொட்டலத் தையும், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் நின்றவனையும் மாறி மாறிப் பார்த்த சங்கரி, குலுங்கப் போனாள். அவனைக் கட்டிப் பிடித்து தோளில் சங்கமமாக நினைத்தவளாய் எழுந்தாள். ஆனாலும், பழைய கசப்பு, புதிய இனிப்பை சேதாரம் செய்தது. காட்டுமிராண்டி மாதிரி ஏன் அழுகிறே என்று கேட்டாலும் கேட்பார். இதனால் மேலும் பத்து நாட்கள் சூன்யமாகலாம். - இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. மனோகர் முன்பக்கம் அற்றுப்போனவன் போல் முதுகு காட்டி நின்றான். அவளோ, கட்டிலில் உட்கார்ந்தபடியே விரல்களுக்குச் சொடுக்குப் போட்டாள். அந்த மல்லிகைச் சரத்தை பொட்டலத் திலிருந்து விடுவிக்கப் போனாள். பொட்டலத்தைச் சுற்றிய வாழை நாரை அவிழ்க்க முடியவில்லை பல்லால் கடித்துப் பார்த்தால், அந்தப் பல்லுக்குத்தான் வலி. பொட்டலமும் கலைய வேண்டும் பூவும் நிலைக்க வேண்டும். எப்படி, எப்படி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/55&oldid=762348" இலிருந்து மீள்விக்கப்பட்டது