பக்கம்:ஒத்தை வீடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 55 மனோகர், அவளுக்கு முகம் காட்டவில்லைதான்; என்றாலும், சங்கரிக்கு ஒரு நிம்மதி. ஆனந்தமான அதிர்ச்சி. மாமியாரின் கிரியா சக்தியால் பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கணவன் மனைவி யுத்தம் முடிவுக்கு வரப்போகிற மகிழ்ச்சி அன்று அவன், ஒரு தரப்பாக போர் தொடுத்த பிறகு, இன்றுவரை அவர்கள் பேசிக் கொள்வதில்லை அன்று முதல் அவள் கட்டி லில் உடல் கொள்ளாமல் தரையில் படுத்தாள் அவனோ, அவள் இருப்பதாக அனுமானிக்கவே இல்லை. மறுநாள் அவள் காப்பி கொண்டு வரவில்லை. அவன் துணிமணிகளுக்கு இஸ்திரி போடவில்லை. ஆனாலும், மாமியார்க்காரி நானிருக்கேன் ராசா. என்று கத்தியபடியே படுக்கை அறைக்கே காப்பியோடு வந்தாள் இரண்டாவது நாளும் இப்படியே. மூன்றாவது இரவில், அவன் வருவதற்கு முன்பே, கட்டிலில் படுத்தாள். அவனோ தரையில் படுத்துக் கொண்டான். மறுநாள் காலையில் மாமியாரை வாசலிலேயே நிறுத்தி அவள் கையிலிருந்த டம்ளரை வலுக் கட்டாயமாக பறித்து, அவனிடம் நீட்டினாள். அவன் குளித்து முடித்து சீவிச் சிங்காரித்து ஒரு அழுக்குப் பேன்டை போடப்போன போது, அவள் அதை வெடுக்கென்று பறித்துவிட்டு, அலமாரியில் தயாராயிருந்த ஒரு நீலப் பேன்டைத் துக்கி, அவன்மேல் எறிந்தாள். அதற்கு இணையாக பால் வெள்ளைச் சட்டை ஒன்றை அவன் தோளில் தொங்கப் போட்டாள் மறு இரவில், அவன் கட்டிலில் படுத்தபிறகு பக்கத்தில் படுத்தாள். அவனோ கல்லுப் பிள்ளையாராய்க் கிடந்தான். அவள் அழுது பார்த்தும் அவன் அசைவில்லை. இன்றைக்கு என்ன ஆச்சு. எப்படி இந்தப் பூப்பழக்கம். அவள் தேன் கொண்ட பூவாய் மலர்ந்தாள். முதுகை முகமாக்காதவனை நினைக்க, நினைக்க சிரிப்பு வந்தது. செல்லமாகச் சிணுங்கினாள். "பூவுக்கு மட்டும் குறைச்சலில்லை." மனோகர், குறைபட்டவன்போல் திரும்பினான். என்ன சொல்கிறாள். அந்த குறைச்சலைச் சொல்லாமல் சொல்லு கிறாளோ. சங்கரி, அவனைச் சீண்டினாள். "யாருக்கு வேணும் இந்தப் பூவு. பிச்சைக்காரிக்கு எறிந்தது மாதிரி எறிந்தால் என் ன் அர்த்தம். ? வச்சா தலையிலே வைக்கணும்.” மனோகரின் முகக் கடுமை இளகியது. முணுமுணுப்பு புன்முறுவலானது வைத்தியர் சொன்னதுபோல், அந்தச் சண்டையையே ஒரு சாக்காக்கி, பத்து நாட்களாய் பல்லைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/56&oldid=762349" இலிருந்து மீள்விக்கப்பட்டது