பக்கம்:ஒத்தை வீடு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஒத்தை வீடு மனோகருக்கு அவனுக்கு வந்தது தனக்கு வந்தது போன்ற அசதியில் பேசினான் "இத மொதல்லயே சொல்லபடாதா..? சரி நீ. வீட்டுக்குப் போ. ஒன் வேலையும் நான் சேர்த்துக் கவனிக்கிறேன்." 'அய்யா. அய்யய்யா. தப்பு தவறு செய்தாலும் பொறுத்துக்குங்க அய்யா. எங்க மாமியார் படுத்த படுக்கையா இருக்காங்க அய்யா. எழுபது வயசு மாமியாருக்கு நான்தான் துனய்யா.” "மாமியாருக்காக அழுகிற முதல் மருமகன் நீதான்." 'அவங்க எங்கூடப் பொறந்த அக்காய்யா. அக்கா பொண்ணத்தான் கட்டியிருக்கேன் அய்யா." "உறவை திரிக்கிற உன்ன இதுக்கே சஸ்பென்ட் பண்ணனும். போய்யா. பேதியானவனுக்கு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். முதல்ல வீட்டுக்குப் போ. முடிஞ்சால் சாயங்காலம் வா." "ஸ்வீப்பர் வரது வரைக்குமாவது இருக்கேன்யா." "அவள் வந்தால், அவள் வேலையப் பார்ப்பாள் நீ போ..." மருதனுக்கு, இப்போது திசமாகவே பேதி வந்தது. என்ன ஆகுமோ. எப்படி ஆகுமோ. பூடகமாய்ப் பேசுறாரே. அவன் ஒடுங்கி ஒடுங்கி வெளியேறினான். மனோகர், மெல்லச் சிரித்தான். அக்காவை மாமியாராக்கியவனை நினைத்து ரசனையோடு சிரித்தான். திடீரென்று சிரிக்க அவனுக்கு அருகதை இல்லை என்பதுபோல், சங்கரி முன்னால் வந்து கை கொட்டிச் சிரிக்கிறாள். தலையில் அடித்து ஒப்பாரி இடுகிறாள். மனோகருக்கு விரக்தி தூக்கமானது. குறட்டை ஒப்பாரியானது. "சாரே. சாரே." மனோகர், திடுக்கிட்டு கண் விழித்தான். விழிப்பில் ஏன் இப்படி பயம் வரவேண்டும் என்று சிந்தித்தான். வைத்தியர் சொன்ன கோழி முடி நினைவுக்கு வந்தது. தன்னைத்தானே நிமிர்த்திக் கொண்டு, அவளைப் பார்த்தான். அலுவலகத்தை கூட்டிப் பெருக்கும் கங்கா. சேரிக்கே உரிய கம்பீரம். உழைப்பில் உருவான உடல்கட்டு. இருபத்து நான்கு தேறலாம். பார்த்தால் பற்றிக் கொள்ளத் துண்டும் கண்கள். பேசும்போது பூ விரிவது போன்ற தோரணை, அவள், இவனைத் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு, இவனுக்கு, அவளைத் தெரியாது ஒரு தடவை, மாதக் கூலியில் ஐம்பது ரூபாய் போட்டுக் கொடுக்கும்படி கேட் டபோது, இவன் நூறு ரூபாய் கூட்டிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/63&oldid=762357" இலிருந்து மீள்விக்கப்பட்டது