பக்கம்:ஒத்தை வீடு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஒத்தை வீடு மனோகர், நாற்காலியில் போய் உட்கார்ந்து ஒரு தாளை எடுத்தான் அவள், அவன் பக்கத்தில் வந்தாள். பிறந்த தேதி தெரியாது என்றாள். முகவரி சொன்னாள். அவன் முழங்கை விலாவில் பட்டபோது, விலகி நின்றாள். குழந்தை இருக்கிறதா? என்று கேட்டபோது, அதான் குரங்கு மூஞ்சியோட போய்ட்டானே. என்றாள். அவன், அவளை அனுதாபமாகப் பார்த்தான் ஒன் அழகுக்கு என்னவாம். என்று சொன்னபடியே கைகளை நெட்டி முறித்தான். ஒரு கை அவள் தோளில்பட்டது. அவள் அதை அறிந்தோ, அறியாமலோ, நின்றபோது, அந்தக் கை, அவள் தோளுக்கு கீழே போய், அவளை, அவன் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்தது. அவன் எழுந்தான். அவளின் கலங்கிய கண்களை நான் இருக்கேன் என்பது மாதிரி துடைத்து விட்டான். அவள் திடுக்கிட்டு திமிறினாள். முகத்தோடு முகம் முட்டியதுதான் மிச்சம். பிடிகள் இறுகின. அணைப்புக்கள் அணையை உடைக்கப் போயின. "வேண்டாம் சாரே. அது மட்டும் வேண்டாம் சாரே." "என்னைப் பிடிக்கலியா..?" "பிடிக்காட்டி இப்படி இடங்கொடுப்பேனா. விடு சாரே. பேஜாரா இருக்குது." "இனிமேல் உன் பிரச்சினை என் பிரச்சினை. அதுக்காக நான் சொல்லல. ஆனாலும் ஒன்னைப் பார்த்ததும்." "சரி சாரே. கதவையாவது சாத்திட்டு வா. வாட்ச்மேன் கேட்டுப் பக்கம் கீறாரு." மனோகர், தள்ளு கதவைத் தாளிட்டான். நானத்தோடு நின்றவளை அப்படியே அப்பிக் கொண்டான். அவளை நகர்த்தி நகர்த்தி ஆன்டி ரூம் எனப்படும் ஒரு பிளைவுட் தடுத்த ஒய்வறைக்கு கொண்டு போனான். அவளை அழுந்தப் பற்றினான். அரைகுறை ஆடைகளில் விட்டான். ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பிறகு அப்படியே அவளை விட்டு விட்டு, உபதேசம் செய்தான். "கங்கா. இது ஆபீஸ். கோயில் மாதிரி. இங்கே வேண்டாம். வசதிப்படும்போது வெளியில போகலாம்." கங்கா, மெல்லத் தலையாட்டினாள். அந்த ஆட்டு ஆமோதிப்பா, எதிர்ப்பா என்று தெரியவில்லை. கம்மா கிடக்கிற சங்கை ஊதிவிட்டுட்டியே சாமி. இனிமே ஒன் நெனப்புத்தான். என்று சிணுங்கினாள் வாளியை தூக்கிக் கொண்டு, கதவின் இடுக்கு வழியாகக் கண்ணைப் பதித்து விட்டு, பிறகு தாழ்ப்பாளை நகர்த்திவிட்டுப் போய் விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/65&oldid=762359" இலிருந்து மீள்விக்கப்பட்டது