பக்கம்:ஒத்தை வீடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 仓5 மனோகருக்குப், பித்துப் பிடித்தது போல் இருந்தது. எல்லாப் பெண்களுமே அவனைத் தள்ளி வைப்பதுபோல் இருந்தது. அவனுக்கு காலநேரம் சூன்யமானது. ஒன்பதரை மணிக்கு வரவேண்டிய ஊழியர்கள் பத்தரை மணி அளவில் வந்தார்கள். அவன் தங்களின் காலதாமத்தை கண்டுபிடிக்க வந்திருப்பதாக அனுமானித்து, பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொன்னார்கள். அவன் போனால் போகிறது என்பது மாதிரி ஆட்டிய கைக்கு, ஒருத்தி, மானசீகமாக முத்தங்கொடுத்தாள். பதினோரு மணிக்கு நிர்வாக அதிகாரி, இரண்டு பைல்ககே.ாடு வந்தார். ஐம்பது வயதுக்காரர். முக்கியமான பைல்க ைள ரொட்டினாக அனுப்பாமல், அவரே கொண்டு வருவார். அதாவது அவருக்கு முக்கியமானதை ஒரு பைலைப் பார்த்தபடியே, மனோகர் கேட்டான். 'கிருஷ்ணனை எதுக்காக மதுரை பிராஞ்சுக்கு டுர் அனுப்பணும். பக்கத்துல இருக்கிற இராமநாதபுரத்துக் கிளார்கை அனுப்பலாமே..?” "வழக்கமாய்ச் சொல்றதுதானே எபார். அவன் பெண்டாட்டி, மதுரையில இருக்காள். போனால், அங்க திறமயக் காட்டுறானோ இல்லியோ, ஆபீஸ்ல வந்து திறமையைக் காட்டுவான்." 'சிரித்து மழுப்பாதீங்க... அவன் பொண்டாட்டியோட படுக்கிறதுக்கு கவர்ன்மென்ட் எதுக்கு டி.ஏ. டீ.ஏ. கொடுக்கனும். நோ. நோ." நிர்வாக அதிகாரி, அவனைப் புதிதாய்ப் பார்ப்பதுபோல், அதிர்ந்து பார்த்தார். தன் பக்கம் நகர்ந்த பைலை வாங்கிக் கொண்டு, அடுத்த பைலை நீட்டினார். அவன் இப்போது அதிக கோபமாய்க் கேட்டான். .مر "என்ன அக்கிரமம் இது..? இந்த வசந்தி. மூன்று மாசத்துக்கு முன்னாலேதானே குழந்தை பெத்தாள்:” "அதனால்தான், அபார்ஷனுக்கு லீவு கேட்கிறாள்." "இது அக்கிரமம். மூன்று மாசம் பிரசவ லீவுல போயிட்டு போன வாரம்தான் டுட்டிலே சேர்ந்தாள். நோ. லீவ்." கோப்பில் ஏதோ எழுதப்போன மனோகரின் கரத்தைக் கிட்டத்தட்டப் பிடித்துக்கொண்டு உரிமைக் குரலில் சட்டோபதேசம் செய்தார், ஏ.ஓ. எனப்படும் நிர்வாக அதிகாரி. "கவர்மெண்டு வேலையில கல்யாணமாகாத பெண் கூட கருக்கலைப்பதற்கு லீவு கேட்டால், கண்டிப்பாகக் கொடுக்கணு முன்னு ரூல் சொல்லுது ஸார்." 3., 5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/66&oldid=762360" இலிருந்து மீள்விக்கப்பட்டது