பக்கம்:ஒத்தை வீடு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 67 "ஒரு பத்து நாளைக்கு சாப்பிட்டாலும் போயிடுமோ டாக்டர்." "கவலைப்படாதீங்க. மாதக் கணக்கிலே சாப்பிட்டாத்தான் கிட்னி கோளாறு வரும்." "அப்புறம் டாக்டர். இந்தியா டுடேயிலேயோ, ரீடர்ஸ் டைஜஸ்டிலேயோ ஒரு கட்டுரை படிச்சேன். மத்திய தரக் குடும்பங்கள்ல அங்கேயும் இங்கேயுமா சில கணவன்மாரால முடியலையாமே. திசமாவா டாக்டர்." "அநியாயமா நிசந்தான்." "இந்த ஆண்மைக் குறைவுக்கு என்ன காரணம் டாக்டர்." “பெரும்பாலும் மனம்தான் காரணம். கணவனுக்கு மனைவிகிட்டே உள்ளுர வெறுப்பு இருந்தால், அவனால முடியாது. கள்ளக் காதலியோட பயந்து பயந்து போனால், தேறாது. இப்படிப் பல காரணம். இப்ப எனக்கு அவசர வேலை. மதுரைக்கு வாங்க... சாவகாசமா பேசலாம். நானிருக்கேன் கவலைப்படாதீங்க." கிருஷ்ணனின் களபின் பிரதர், ஒரு கேஸ் கிடைத்த திருப்தியோடு போய்விட்டார். மனோகர், அவரிடம் சொல்லியிருக்கக் கூடாது என்று மருவினான். ஆனால், இப்போது அலுவலகமே சங்கரியாகிவிடும். என்றாலும், அவனுக்கு ஒரு சின்ன ஆறுதல். அவன் பிரச்சினை, ஆண்மைக் குறைவு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம். சங்கரி நாட்டுப்புறத் தோற்றம் கொண்டவள். பழக்க வழக்கமும் அப்படித்தான். பெண் என்ற நினைப்பற்று ஆண்களை இடிப்பதுபோல் நின்று பேசுகிறவள். அப்படியானால், அவளிடம் முடியாதது, இந்தக்கங்காவிடம் முடிந்திருக்க வேண்டுமே? முடிந்திருக்கும். ஆனால் பயம் அந்தஸ்தைப் பற்றிய பயம் அந்தஸ்த்துப் பேதம் பற்றிய பயம் மனோகர், தன்னை மறக்க அலுவலகப் பைல்களை அழுத்தம் திருத்தமாகப் புரட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று தள்ளுகதவு சத்தம் போட்டது. அவன் எரிச்சலோடு பார்த்துவிட்டு, பிறகு எழுந்து நின்றான். வந்தவள் நீலம் கவுல். மிஸ் நீலம், வெள்ளையான கொள்ளை அழகு. பிடரிக்குக் கீழே போகாத பாப் முடி மஞ்சள் கட் சோளி வெளிப்படையாய்த் தெரிந்த தோள்களுக்கு இடையே அந்தச் சோளி, அவள் கழுத்துக்கு தங்க உறையாய் மின்னியது. கோவில் மாட்டுத் திமில்கள் மாதிரி உருண்டு திரண்ட புஜங்கள். ஈரப்பசையான உதடுகள். வசீகரிக்கும் சென்ட் வாசனை மிசெளரிப் பயிற்சியில் அவள், இவனோட பேட்ச் மேட் சில ஐ ஏ எஸ் டிரெயினிகள். இவள் பின்னால் லோ லோ' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/68&oldid=762362" இலிருந்து மீள்விக்கப்பட்டது