பக்கம்:ஒத்தை வீடு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V வேதனையை, சமூகம் அக்கறையோடு கேட்டதுகூட கிடையாது. இந்தத் துறையில் இருக்கும் எங்களைப் போன்ற டாக்டர்கள், பலசமயம் இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களின் சில விபரீத முடிவுகளைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறோம். ஆங்கில மருத்துவம், சரியான மருத்துவம் கண்டு பிடிக்காமல் திணறிக் கொண்டிருக்கம் பிரச்சினையில், இதுவும் ஒன்று. அதன் விளைவு, சிட்டுக்குருவிகளும், கருங் குரங்குகளும், பச்சைப்புறாக்களும், பச்சோந்திகளும் பரிதவித்துப் போகின்றன. ஆண்மைக் குறைவைப் பற்றி தமிழில் வேறு நாவல்கள் வந்திருக்கிறதா என்று எனக்குத் த்ெரியாது. ஏர்னஸ் ஹெமிங்வேயின் சன் ஆல்ஸோ ரைஸஸ் (Sun Also Rises) என்ற ஆங்கில நாவல், சில மாய்பஸான் கதைகள், தமிழில் "சாரதா" என்ற திரைப்படம் - எனக்குத் தெரிந்து இவைகள்தான், இந்தப் பிரச்சினையை ஒரளவு அணுகியவை. இவற்றில்கூட, ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவனுடைய வாழ்க்கையில் வந்த பெண்கள் அல்லது அவன் மனைவி என்று பெண்களின் பிரச்சினைகள்தான் அவசப்பட்டன மீண்டும், என்னைப் பொறுத்தவரையில், ஆண்மைக் குறைவினால், ஆண்-பெண் இருபாலர்க்கும் ஏற்படும், உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளை சம அளவில் விறுவிறுப்பான முறையில் அணுகியிருக்கும் முதல் நாவல் "ஒத்தை வீடு" என்று கருதுகிறேன். யதார்த்தம் சமுத்திரம் நாவல்களில், வழக்கப்படி எனக்கு ஏற்படும் பிரச்சினை, இதில் சற்று அதிகமாகவே ஏற்பட்டது. இந்த நாவலை மேலோட்டமாகப் படிக்க முடியாது. சமுத்திரத்தின் ஒவ்வொரு அலையும் வித்தியாசமானவை. அதைப் போலவே சமுத்திரம் நாவ்ல்களின் ஒவ்வொரு வரியும் பல்வேறு கருத்துக்களோடு நம் மனதைத் தொடும். ஊருக்குப் பொது வழிப்பாதை போட நிலத்தில் இடம் கேட்டு ஆக்கிரமிக்க முயலும் கிராமப்புற ஊரார்களை, அதிகாரிகள் மூலம் சரிக்கட்டவேண்டும் என்ற பிரச்சினையைக் கொண்ட சகோதரியும், உணர்ச்சியின் உந்துதல்களுக்கு எதிர்பார்த்த மாதிரி செயல் படுகிற காமியாராக நாயகனின் தாயும், பக்கத்து வீட்டு உமாவும், தன் மனைவிமீது கண் வைத்திருப்பதாக நாயகனை சந்தேகிக்க வைக்கும் இந்திரனும், அவ்வப்போது வந்தாலும், அவர்கள் நாவலின் யதார்த்ததத்துக்கு காரணமாகிறார்கள். ஆண்மைக் குறைவில், இரவு ஏமாற்றத்தை எத்தனை அழகாக நாசூக்காக சொல்கிறார் சமுத்திரம் நாயகி காலையில் குளிக்காமல் பூஜை அறைக்கு சென்று வருகிறாள். அவள் தலையிலிருந்த மல்லிப்பூக்களின் தன்மையை வைத்தே, கணவனின் சகோதரி எதுவுமே நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்கிறாள் என்பது, நரகலாகியிருக்கக் கூடியதை நளினமாக்கிய கவிதை "ஐம்பது இரவுகளில், பெளர்ணமிக்குப் பதிலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/7&oldid=762364" இலிருந்து மீள்விக்கப்பட்டது