பக்கம்:ஒத்தை வீடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ያ மின்சார விளக்குகளில் மினுமினுத்த மையிருட்டு தயிரின் தெளிந்த நீர் போன்ற ஆகாய வெளிச்சம், இரவின் பிறப்பா அல்லது இறப்பா என்று கண்டறிய முடியாத வேளை விடியல் பிரசவத்தின் இயற்கை வெளிப்பாடுகளான குருவிச் சத்தமோ கோழிச்சத்தமோ கேட்கவில்லை. ஆனாலும் சிசேரியன் ஆப்பரேஷன் போல், இருளின் வெளிப்பாடுகள் தோன்றின. மாநகரப் பேருந்துகள் வெறுமையாக நகர்ந்தன. வைக்கப்போர், செங்கல், இரும்பு டப்பா லாரிகள் மாமூலாகப் போகாமல் மைனர் நடை போட்டன. மோட்டார் பைக்குகளிலும் ஸ்வட்டர்களிலும் பெண்கள் தலை முக்காடு களோடும், ஆண்களில் சிலர் சரிந்து வைத்த தொப்பிகளோடும் உட்கார்த்தபடியே ஒடிக் கொண்டிருந்தார்கள். மனோகர், கரங்களைத் தலைக்கு முக்காடாக்கி நடந்தான். சிறிது தொலைவில் நாய்கள் குலைக்கும் சத்தம் மட்டும் கேட்கவில்லை யானால், தொடர்ந்து நடந்திருப்பான். தெரு நாய்களுக்குப் பயந்து, நான்கு பக்கமும் பார்த்தான் நல்ல வேளையாக பேருந்து நிழல்குடை அருகிலேயே இருந்தது. அதன் முன்பக்கமும் பின்பக்கமும் பிளாட்பார பிரஜைகள் மூட்டைகளாய் வளைந்து கிடந்தார்கள் அப்பன், பிள்ளை, மனைவி என்று பூஜ்யமாய் வட்டமிட்டு படுத்து இருந்தார்கள். மனோகர், அந்த நிழல் குடைக்கு வந்து அதன் இரும்பு தூணில் பின்பக்கமாய் கைகற்றிச் சாய்ந்தான். அவ்வப்போது ஒரு காலை இன்னொரு காலால் பின்னிக் கொண்டான். நடந்ததை நினைக்க மனம் மறுத்தது. ஏதோ ஒரு மாயப் பேய் உருவம், அவனை உச்சி முதல் பாதம் வரை ஆக்கிரமித்து நெஞ்சைக் கோர நகங்களால் கீறியது. தொண்டையை அசுரப் பற்களால் கடித்தது. உலகின் அத்தனை பளுவும் தலையில் ஏறி அதைத் தாறு மாறாய் ஆடச் செய்தது. இப்படி நடக்குமா. நடக்குமா என்று மனம் அவனைக் கேட்டது. அவன் மனதைக் கேட்டான். தொண்டைக்குள் ஒரு தேள் கண்களில் நெருப்புக் கதிர் வீச்சு மூளைக்குள் ஈட்டி முனைகள், வாய்க்குள் அரைப் பைத்தியமானது போல் முணு முணுப்பு. நீலம் குடிவெறியில்தான் அப்படிப் பேசினாள் என்று ஒரே ஒரு சலுகையைத் தான் அவளுக்குக் கொடுக்க முடியும். மற்றபடி, ஆண்களைப் பிடித்துத் தின்னும் ராட் சசியாக நடந்து கொண்டது போலத்தான், அவனுக்குத் தோன்றியது. அவள் குடிக்கு கம்பெனி கொடுக்கவில்லை என்றதும், உதவாக்கரை என்று திட்டியது கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/70&oldid=762365" இலிருந்து மீள்விக்கப்பட்டது