பக்கம்:ஒத்தை வீடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 71 மனோகர், உள்ளமும் உடலும் அசைவற்றுப்போக நின்ற கோலத்திலேயே நின்றான். அந்த பேருந்து நிலைய துரண்களில் ஒன்றை, கட்டியபடியே தூங்கிவிட்டான். இதற்குள் மனித அரவங்கள் வெளிப்பட்டன. ஆவின் வேன் அலறியது. பக்கத்துப் பால் பூத்தில் வேலைக்காரப் பெண்களின் பிலாக்கணங்கள். சிறுவர்களின் பெரியமனித தோரணையான பேச்சுக்கள். அந்த நிழல் குடையைச் சுற்றியும் கடைக் கூடார பிளாட்பாரங்களிலும் படுத்துக் கிடந்தவர்கள், அசைந்து கொடுத்தார்கள். பொக்கிஷங்களான மூட்டைமுடிச்சுக்கள் இருக்கின்றனவா என்று படுத்தபடியே தலையைத் தூக்கியவர்கள், டப்பாக்களில் தண்ணிர் நிரப்பி அவற்றைத் துக்கிக் கொண்டு நடந்தவர்கள், சேலைகளையே போர்வையாக்கிப் படுத்துவிட்டு அப்போது, போர்வைகளையே சேலையாக்கிக் கொண்டிருந்த பெண்கள், கடைகளின் படிக்கட்டுகளில் திட்டு வாங்கிய நோயாளிகள், சமையலறையான மூன்றுகல் அடுப்புக்களை மூலையோரமாய்க் கொண்டு போன முதியவர்கள். எவரோ ஒருத்தர் மனோகரை அதட்டலாகக் கேட்டார். சுவர் ஒரம் கிடந்த பிளாஸ்டிக் பானையை கொண்டுவந்து, முகத்திற்கு 'சதக் சதக் என சத்தமிட நீரடித்தபடியே, "ஏரப்பா நீ உனக்கு இங்க என்ன வேலை..." என்று அதட்டலாய்க் கேட்டார் பிறகு "பஸ்ஸுக்கா நிற்கே..." என்று அவனுக்கு ஒரு பதிலையும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் துரங்கிப் போன மனோகர், கண் விழித்தான். வினாடி நேரம் நிர்மலமான மனதில், இரவு நிகழ்ச்சிகள் நினைவுகளாய்ப் பீறிட்டன. பழைய நினைவுகளையும் இழுத்து வந்தன. வெற்றுக் குடத்தை ஆற்றுப் பிரவாகத்தில் அப்படியே முக்கிய நிலை நீரும் ஏறவில்லை. குடமும் நிரம்பவில்லை. அவன் பின் பக்கமாய்த் திரும்பினான். ஒரு இளம் பெண் பாவாடை மேல் ஒரு படுதாத் துணியை தாவணியாய்ச் சுற்றிக் கொண்டிருந்தாள். முந்தானை பரவாத முன் பக்கம். தற்செயலாய்ப் பார்த்த மனோகர் அப்படிப் பார்ப்பதையே ஒரு செயலாக்கினான். மனதில் இச்சை வந்ததோ இல்லையோ, அவன் மனப்பாரத்திற்கு அவள் நெம்புகோலானாள். இதற்குள் அந்தப் பெண் சீறினாள். "யோவ். இதுக்கு முன்னாடி நீ பொம்மனாட்டிங்களைப் பாத்ததே இல்லியா, கஸ்மாலம்." என்று கத்தினாள். அவள் போட்டக் கூச்சலில், மிச்சம் மீதியாய் படுத்திருந்தவர்கள் எழுந்தார்கள்; அவனை நெருங்கினார்கள். மனோகர், அங்கிருந்து நழுவி ஓடாக்குறையாக நடந்தான் பயத்தோடு திரும்பிப் பார்த்தான். எவரும் அவனை விரட்டுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/72&oldid=762367" இலிருந்து மீள்விக்கப்பட்டது