பக்கம்:ஒத்தை வீடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஒத்தை வீடு "அடே என் ராசா. எங்கேடா போனே? ராத்திரி முழுசும் டெலி போன் மேலே டெலிபோனா போட்டோமேடா. காலம் இருக்கிற இருப்புல என்ன எல்லாமோ நினைச்சோமடா இந்தச் சண்டாளி ஒன்ன என்னடா பண்ணினா ? இப்பவே இங்கேயே சொல்லுடா. இந்த வீட்ல இந்தப் பேயாள மட்டும்தானா இருக்காள்..? நா இல்லி யா. அக்கா இல்லியா. தெய்வமே. தெய்வமே. செத்துப் போன தெய்வமே. ஒடுற பாம்பை பிடிக்கிறது மாதிரி இருந்த என் பிள்ளை. இந்தச் சண்டாளி வந்த பிறகு, பேயறைஞ்சது மாதிரி ஆயிட்டானே. ஏண்டா அப்படிப் பார்க்கே. எனக்கு பயமா இருக்குடா." சங்கரி குன்றிப் போனாள். கால்கள் வளைந்து கொண்டிருந்தன. தலையும் கழுத்தும் சுருங்கிக் கொண்டிருந்தன. அம்மாவை அதட்டும் அண்ணி கூட, மவுனச் சம்மதமாய் நின்றாள். கொடுமையிலும் கொடுமையாகக் கட்டிய கணவன் பேசாமல் நின்றான். இதற்குள், தெருவோரம் சின்னக் கூட்டம். பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள், அவற்றை இறக்கியபடியே, ஒடி வந்தார்கள். எதிர்வீட்டு மொட்டை மாடியில் நின்ற உமாவும், அவள் மாமியாரும், நெருங்கிய தோழிகளாய் நின்றார்கள். இந்திரன் மட்டும் கீழே வந்தான். எதுவும் நடக்காதது போல், மனோகரை நெருங்கினான். என்ன ஸார் இப்படிப் பண்ணிட்டீங்க...? ஒரு டெலிபோனாவது செய்யக் கூடாதா? ஒங்க ஒய்பும், ஒங்க அக்காவும், எங்க வீட்டுக்கு வந்து அழுத அழுகையில் எங்க உமா இன்னும் அழுதுகிட்டே இருக்காள். போலீஸ்ல என்னை புகார் செய்யச் சொன்னாங்க. நான்தான் இன்னைக்குக் காலை வரை பொறுத்துக்கச் சொன்னேன். ராத்திரி என்னசார் நடந்தது.” மனோகர், இந்திரனை, அகலிகையின் ரிஷிக் கணவன் பார்த்தது போலவே பார்த்தான். 'மானங்கெட்ட பய, வலியப் பேசுறான். எனக்காகவா பேசுறான். சங்கரி எப்படி அங்கே போகலாம்? நான் ஒரு நாள் தலை மறைஞ்சதுக்கே இப்படின்னா. ஒரேயடியா மறைந்தால். இந்த அக்காவுக்கு புத்தி எங்கே போயிட்டு.? அவள் குதில்லாம போயிருப்பாள். இந்த சங்கரிதான், இதைச் சாக்காக வைத்துப் போயிருப்பாள். மனோகர், இந்திரனுக்குப் பதில் சொல்லாமல், சங்கரியை அதட்டலாகப் பார்த்தான். அவசரப் பிரகடனச் சட்டத்தை வெளியிட்டான். சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பல்ல. தீர்ப்பின் அடிப்படையிலான சட்டப் பிரகடனம். "ஏய் சங்கரி, ஒண்ணு உள்ள போ. இல்லைன்னா வெளிலே போ இப்படி மானத்த வாங்கிட்டு நிற்காதே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/75&oldid=762370" இலிருந்து மீள்விக்கப்பட்டது