பக்கம்:ஒத்தை வீடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI அமாவாசைகளே வந்தன." எப்படிப்பட்ட விஷயத்தை எத்தனை எளிமையாக சமுத்திரம் எழுதிவிட்டார்! இல்லை ஒவியமாகத் தீட்டிவிட்டார். நாத விந்து விளக்கம். "நாத விந்து கலாதி நமோ” என்ற அருணகிரிநாதரின் வரிகளுக்கான விளக்கம், எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சிருஷ்டியின் ரகசியத்தை, இயற்கை (கடவுள்?) மட்டுமே அறிந்திருக்கும் ஒரு விந்தையை, நம் முன்னோர்கள் ஒரே வரியில் சொல்லியிருக்கிறார்கள் என்று எண்ணும்போது, அவர்களின் அறிவியல் அறிவில் கோடியில் ஒரு பங்குகூட இன்றைய தமிழனிடத்தில் இல்லையே என்று நெஞ்சு கனக்கிறது. ஆங்கிலத்தில் படித்து சுயமாக சிந்திக்கும் திறனை இழந்த நாம், நம் முன்னோரின் இம்மாதிரி அறிவியல் திறமைகளை எண்ணிப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு வழியில்லை. இந்த இரு பக்கங்களுக்கு நான் சமுத்திரம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வரிக்கு வரி மனப்பாடம் செய்ய வேண்டிய அளவுக்கு அறிவியலும் தத்துவ விளக்கங்களும் கொண்ட இரு பக்கங்கள் அவை. "பெண் என்பவள் சக்தி. சக்தியைத் திருப்தி படுத்த எந்த ஆனாலும் முடியாது. ” "தாம்பத்ய உறவில், மனைவியை அடக்க நினைக்காதே; அடங்க நினை" "அவளை பப்ளிக்காய் அடக்கனும், பிரைவேட்டாய் அடங்கணும்." "ஆணாய் நடக்க முடியாதவன், பிணமாய்த்தான் போகவேண்டும்." "பொம்மனாட்டிக்கிட்ட போறவன் சாதா ஆம்பிளைன்னா, அவளைக் கட்டி காக்கிறவன் பெரிய ஆம்பிளை." இவை போன்ற விவாதத்துக்குரிய சிந்தனையைக் கிளறக்கூடிய சமுத்திர முத்துக்கள் நூலின் சிறப்பு. மனவியல். மனவியல் ரீதியாக, ஆண்மைக் குறைவானவன், அதை நிவர்த்தி செய்து கொள்ள, மீண்டும் மீண்டும், வெவ்வேறு பெண்களிடம் முயற்சிப்பான். அடி மனதில் அழுந்திக் கிடக்கும் பயம், முயற்சிக்கும் நேரத்தில், அவனை ஆக்கிரமித்து, அவனை செயல்பட விடாமல் செய்துவிடும். இந்த மனவியல் மருத்துவத்தின் உண்மையை வெகு அழகாக நெஞ்சைத் தொடும்படி வெளிக் கொணர்ந்திருக்கிறார் சமுத்திரம். குறிப்பாக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் கங்கா என்ற பாத்திரம், அதன் மூலம் வெளிப்படுகிற சில அனுபவ விளக்கங்கள், மனிதர்களை ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. ஹோட்டலில் நடக்கிற சம்பவங்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/8&oldid=762375" இலிருந்து மீள்விக்கப்பட்டது