பக்கம்:ஒத்தை வீடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 81 இந்திரனுக்குள் ஆனந்தக் கூத்து கணவனுக்குச் சாதகமாகப் பேசினாலும், ஒரு அந்தரங்க விஷயத்தை பகிர்ந்து கொண்டாள். இனிமேல் உடல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான் பாக்கி, "எந்த லாட்ஜ் நல்ல லாட்ஜ்" "நீங்க நினைக்கிறது மாதிரி முடியாது." 'முடியுமாம் சார். ஒவ்வொருவருடைய பிரச்சினையும் ஒவ்வொரு விதமாம். அவரோட பிரச்சினை என்ன னப் பிடிக்காததாலே ஏற்பட்ட பிரச்சினையாம். உங்க பொண்டாட் டிய அவருக்கு ரொம்ப பிடித்திருக்காம். அவள அனுப்பி வைத்தால், அவரோட பிரச்சனை தீர்ந்திடுமாம். அனுப்பி வைக்கிறியாடா. நாகரீகம் தெரியாத நாயே. கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்கள்டா. நான் மதுரைக்காரி. இனி ஒரு தடவை வாலாட்டினே. ஒன் தலை, ஒன் கழுத்திலே இருக்காது. ஒன் பெண்டாட்டி என்கிட்ட சொன்னதெல்லாம், நான் ஒங்கிட்ட சொன்னால், நீ தூக்குப் போட்டுச் சாக வேண்டியிருக்கும்." இந்திரன், நிற்குமிடமும், அந்த இடம் இருக்கும் வீடும், அந்த வீடு இருக்கும் தெருவும், அற்றுப்போய் நின்றான். சொர்ணம்மா விற்கு கேட்டிருக்குமோ என்ற பயம். உமா வந்து விடுவாளோ என்ற அச்சம். அவளைப்பார்த்து தலை கவிழ்ந்து கைகளை உயரத் தூக்கினான். சங்கரி அந்தக் கதவே உடைக்கப் போவது போல் ஒரே வீச்சாய் சாத்திவிட்டு அறைக்குள் திரும்பினாள். திரும்பி வந்த கதவை காலால் இடறினாள். அங்கே, அவளை எதிர்பார்த்து நிற்பது போல் மனோகர் நின்றான். பேடித்துப் பிரமித்து நின்றான். அவனைப் பார்த்த சங்கரிக்கு ஒரு ஆவேசம் குறைந்தது இவர் அந்தப் பழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், கூடிப் பேசலாம். இவருடைய பாராமுகம் தான், அந்தப் பயலைப் பார்க்கும் முகமாக்கி விட்டது. இவரோடு இணைந்து போயிருந்தால், அவனுக்கு அப்படிப்பட்ட எண்ணம் வந்திருக்காது. அலுவலகத்திற்கு இவர் என்னைக் கூட்டிச் செல்வதே முறை. இல்லையானால் தாலிக் கயிறைப் பார்ப்பவர் களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். அதுவே இந்தப்பயலைப் போன்ற, சிலரை உற்பத்தி செய்யலாம். இவர் என் கணவர். இவர் என்னோட வரவேண்டும். வந்தாகவே வேண்டும். சங்கரி அவன் கைகளை இரண்டையும் ஒற்றை ஆக்கி தன் கைக்குள் பிடித்துக் கொண்டாள். இன்னொரு கையால் அவன் தோளை உலுக்கி, கத்தினாள். 3. Θ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/82&oldid=762378" இலிருந்து மீள்விக்கப்பட்டது