பக்கம்:ஒத்தை வீடு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 83 ஆதிக்கத்தையும், உள்ளுறுப்புகளும், வெளியுறுப்புகளும் கேள்வி கேட்பது போன்ற கோணல். சுழல்வதை காட்டாததுபோல், சுழல்கின்ற பூமியாய், அவள் தன்னுள்ளே சுழன்றாலும், சுழலாதவள் போல் நின்றாள். மனோகர், ஏதேதோ பேசிக்கொண்டே போனான். அவள் காதில் விழவில்லை. திடீரென்று, அவன் மீது பாய்ந்தாள். கராத்தேக்காரி மாதிரி ஒரே தாவாய் தாவி, அவனை வீழ்த்தினாள். அவன் தட்டுத் தடுமாறி எழுந்தபோது, அவன் தலை முடியை பிடித்து இழுத்தாள். அவன் திமிறி விடுபட்டபோது, அவன் சட்டையை இழுத்தாள். அந்தக் காகிதம்போல் சுக்குநூறாய்க் கிழித்தாள். ைெகவிரல்கள் கம்பிகளாகின. கண்கள் தீக்கட்டிகளாகின. அவன் இந்த எதிர் பாராத தாக்குதலால் சுயத்தை இழந்தான். 'ஏய். ஏய் என்று அங்கும் இங்குமாய் ஓடினான். அவள், தலையணையைத் துக்கி அவன்மீது எறிந்தாள். கையிலிருந்த அவன் சட்டைக் கிழிசல்களை வீசினாள். டெலிபோனைத் துரக்கிக் கீழே போட்டாள். ஒரு நாற்காவியைத் துரக்கி மல்லாக்கப் போட்டாள். பீரோ கண்ணாடிக்கு முன்னால் போனாள். அவளது உருவம் அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ. அந்தக் கண்ணாடிக்குள் அவன் உருவமும் தெரிந்ததோ என்னமோ. கண்ணாடியைக் கைகளால் குத்தினாள். குத்திக் குத்தி விரல்களுக்கு குருதி வண்ணம் கொடுத்தாள். அவனையே குறிவைப்பது போல் ரத்தமும் கையுமாய் மீண்டும் பாய்ந்தாள். அப்போது. சொர்ணம்மா, ஓடிவந்தாள். குய்யோ முறையோ என்று கத்தினாள். "அய்யோ. அய்யய்யோ. என் பிள்ளையப் போட்டுக் கொல்றாளே. நான் உள்ளங்கையிலே ஏந்தி வளர்த்த செல்ல மகனை. கொல்லு கொல்லுன்னு கொல்றாளே. கிளியை வளர்த்து பூனை கையிலே ஒப்படைச்சிட்டேனே. ஏய் விடுடி அவனை விடுடி என் பிள்ளையை: சொர்ணம்மா, மருமகளை பிடிக்கவோ அடிக்கவோ, அவள் பக்கமாய் ஓடினாள். ஆனாலும் அவள் பார்த்த பார்வையில் பைசா நகரக்கோபுரம் போல் சாய்ந்து நின்றாள். இதற்குள் காந்தாமணி, ஒடி வந்தாள். காய்கறி வண்டிப் பையன் வந்தான். கட்டிடத் தொழிலாளர்கள், ஒடோடி வந்தார்கள். சொர்ணம்மா, எல்லோரிடமும் முறையிடுவதுபோல் கத்தினாள். "அய்யோ எங்கேயும் நடக்காத ஒரு அநியாயம் இங்கே நடந்திட்டே." காந்தாமணி, சங்கரியை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு, தம்பியை மீட்டினாள். நாத்தனாரை ஒரு கவரோடு சாத்தி, அவள் மார்புக்குக் குறுக்கே கையை அடைப்பாக்கிக் கொண்டு, தம்பியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/84&oldid=762380" இலிருந்து மீள்விக்கப்பட்டது