பக்கம்:ஒத்தை வீடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஒத்தை வீடு புரண்டு, அந்த சாலையை நிர்வாணமாகக் காட்டியது. ஆள் அரவம் அதிகமில்லை. நின்றவர்களும் அருகே உள்ள கடைக் கண்ணிகளில் ஒதுங்கிக் கொண்டார்கள். என்றாலும், மனோகர் மட்டும் மழையில் நனைந்தபடியே நின்றான். நனைகிறோம் என்ற நினைவற்றே நின்றான். அவனுக்குக் குளிரடிக்கவில்லை. தலையைக் குட்டிய மழை நீரும், உடலை அப்பிய ஈர உடையும், அவனுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை. நல்லதுக்கும் கெட்டதுக்கும் அப்பால்போன ஞானம். ஞானத்தின் எதிர் மறையோ, அஞ்ஞானத்தின் வெளிப்புறமோ. முற்றும் நனைந்ததற்கு ஈரமில்லை என்பதுபோல் நின்றான். கங்காவுக்காக நின்றாலும், அவள் வருகையின் உணர்வற்றே நின்றான். சங்கரியை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டது. காக்காய் வலிப்போ. வேறு எதுவோ. இன்றைய டெஸ்டில் நாளைக்கு ரிசல்ட் தெரியும். அக்காவும், அம்மாவும் மாறி மாறித் தவம் கிடக்கிறார்கள். ஆரம்பத்தில் துள்ளிக் குதித்த அம்மா, அடங்கிப்போனாள். வரதட்சனைக் கொடுமை என்று ஆகிவிடப் படாதே என்று காந்தாமணி சொன்னதும், அவள் ஆடிப்போனாள். ஆனால், இவனுக்கோ அந்தச் சிந்தனையே இல்லை. வாடகைக் காரில், சங்கரியை பிணம்போல் ஏற்றினார்கள். அவனும் பிணம் போலவே அந்தக் காரில் ஏற்றப்பட்டான். அக்காக்காரி அந்தக் காருக்குள்ளேயே அவனைக் கட்டிப்பிடித்து அழுதாள். அம்மாக்காரி அவன்மீது முட்டி மோதினாள். மனோகர், நினைவுகளை உதறிவிட்டு, அந்தப் பஸ் நிறுத்தத்தில் பட்ட மரமாய் நின்றான். அவன் பாலை மனத்தில் துளிர் விட்டது ஒன்றே ஒன்று. பெண் மோகம். அந்த மோகமே பித்தானது. எதிர்காலத் திட்டமோ, நிகழ்கால நினைப்போ ஏதுமற்று, அப்போதைக்கு அப்போது, வாழும் தற்காலிக வாழல். பெண் பித்துக்காகவே வாழுதல், மனச்சுமையை மறக்கும் காமத்தேடல். இதனால்தான், இந்த ஒருமாத காலத்தில், தெருக்களில் தேடிப்பிடித்த நான்கு பெண்களோடு கடற்கரைக்குப்போய் இருக்கிறான் மூன்று பெண்களோடு சினிமாவிற்குப் போய் இருக்கிறான். ஐந்தாறு பெண்கள் செருப்புக்களைத் துக்கியதையும் கண்டிருக்கிறான். ஜீ.பி.எப்பில் கடன் வாங்கினான். டி.ஏ. அட்வான்ஸ் வாங்கி அரசுப் பயணம் மேற்கொள்ளாமல், அதே பணத்தில் பெண் பயணத்தில் லயித்துவிட்டான். பயணம் என்றால், அறைக்குள் நடத்தும் ரகசியப் பயணமல்ல. பகிரங்கமான சினிமா தியேட்டர்களிலும், கடற்கரைகளிலும் நடத்தும் பாதிப்பயணம். எல்லையைக் காணமுடியாத இடைவேளைப் பயணம் இவனால், இப்போதைக்கு அவனுக்கு எதுவுமே உறைக்கவில்லை உயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/87&oldid=762383" இலிருந்து மீள்விக்கப்பட்டது