பக்கம்:ஒத்தை வீடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII அதன்பின் கங்காவுக்கும் மனோகருக்கும் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் சமுத்திரத்தின் பார்வையை எந்தப் பரிமாணம் கொண்டு அளப்பது என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நான் ஆரம்பத்தில் கூறியதுபோல், சமுத்திரம் அவர்களும் இந்த மையக் கருத்தைக் கொண்ட வேற்று மொழி நாவல்களிலிருந்து சம்பவங்களை எடுத்து, அதைத் தன்னுடைய எழுத்துக்களாகக் காட்டி சுலபமாக பேர் வாங்கியிருக்கலாம். ஆனால், இவர் சமுத்திரமாயிற்றே! "ஒத்தை வீட்டின் ஒவ்வொரு பக்கத்திலும், அவரின் உழைப்புத் தெரிகிறது. சித்த மருத்துவமும், அலோபதி மருத்துவமும், மனவியில் ரீதியான இந்த பிரச்சினையை எப்படி அணுகுகின்றன என்பதை வெகு நுட்பமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். குடும்பத்திலும், சமூகத்திலும் நடக்கும் பல்வேறு இனம் புரியாத குழப்பங்களுக்கு, ஆண்மைக் குறைவு போன்ற பாலியல் பிரச்சினைகள் எப்படி காரணமாகின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வைத்திருக்கிறார். மருத்துவர்களுக்கே தகராறு செய்யும் இந்த விஷயத்தை, விறுவிறுப்பாகவும், சுவையாகவும், உள்ளத்தை ஊருடுறுவும் வகையிலும் சொல்ல சமுத்திரம் ஒருவரால்தான் முடியும். புதைமண் புதைமண்ணில், சு. சமுத்திரம் என்ன புதிதாக சொல்ல வந்திருக்கிறார்.? புதிது புதிதாகத் தோன்றிவரும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், தொழில்களும், ஒரு தனி மனிதனின் அடிமனதில் ஏற்படுத்துகிற பிரச்சினைகளும், அதனால் அவனுடைய வாழ்க்கையே திசை தடுமாறிப் போவதையும், பால்வினை நோய்கள், எய்ட்ஸ் போன்றவைகள் பரவுவதற்கு, அவை காரணமாக இருப்பதையும் - என் போன்ற இந்தத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் உணர்ந்து வேதனையடைந்து, இதைமாற்ற வழியுண்டா என்று குழப்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான், சு. சமுத்திரம் அவர்கள், தன் சக்திமிகுந்த எழுத்தாற்றலை, இந்தத் துறையின் பக்கம் திருப்பி, இளைஞர் சமூகத்திலும், இலக்கிய உலகத்திலும் வியக்கத்தக்க அற்புதமான மாறுதல்களை உருவாக்கியிருக்கிறார். அலிகளைப் பற்றிய அவரது வாடாமல்லியும், எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய அவரது பாலைப்புறாவும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் புரட்சி என்பது உலகறிந்த உண்மை. இந்தப் புதைமண், அதேபோல் சந்தர்ப்ப வசத்தால், தன்னினச் சேர்க்கையாளனாக (HOMO SEXUAL) மாறிய ஒரு கிராமத்து இளைஞனின் கதை. இதைப் படிக்கும்போது, அந்த இளைஞனின் நாட்குறிப்பை, அவனது அனுமதியோடு படிக்கின்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. அவன் ஹோமோசெக்சுவலாக மாறி, அதை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/9&oldid=762386" இலிருந்து மீள்விக்கப்பட்டது