பக்கம்:ஒத்தை வீடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஒத்தை வீடு வந்தவன் பணிரெண்டு, பதிமூன்று வயதுச் சிறுவன் பூவாகாமல், பிஞ்சாகாமல் வெம்பிப்போன பழம், முகத்தில் முதிர்ச்சி. அதாவது வறுமையின் முதிர்ச்சி. செடி மரமாகாமல் தடுக்க கிளைகளை வெட்டியெடுத்த, இலைதளைகள் பிய்த்து எறியப்பட்ட மரத்துப்போன செடி. கண்களைச் சிமிட்டாமல் கள்ளச் சிரிப்பை உதிர்க்காமல், அவர்களைப் பேரன் பேத்தியாய்ப் பார்த்து ஒரு தாத்தாவின் தோரணையில் கேட்டான். "வேற ஏதாவது வேணுமா சார்." "அப்படின்னா..." "அதுதான். விஸ்கி, பிராண்டி, ஜின், சிக்கன் 65, நூடுல்ஸ், பிரைடு ரைஸ், சிக்கன் மஞ்சூரி, சிக்கன் டிரை, நான், சப்பாத்தி." மனோகருக்கு சாப்பிடாமல் இருப்பது அப்போதுதான் உறைத்தது. கட்டிலுக்குக் கீழே கிடந்தவளைக் குனிந்து பார்த்தான். அவளோ எதுவும் வேண்டாம் என்பதுபோல் தலையாட்டினாள். அந்தச் சிறுவனைப் போகச் சொல்லும்படி படகோட்டுவது போல் கைகளைக் கொண்டு போனாள். ஆனால், மனோகர் வேறுவிதமாக நினைத்தான். நீலம், அன்று படுக்கை அறையில் சொன்னது நினைவுக்கு வந்தது. அடே பையா. ஆளுக்கு ரெண்டு பெக் தண்ணி அடிச்சிட்டு படுக்கையில் புரண்டா அந்தச் சுகமே அலாதிடா. என்றாள். அப்போது அதை மறுத்தவன், இப்போது ஒப்புக் கொண்டான். பாதிப் போதையில் கண்கள் கிறங்க பெண் ஆண்வசமாக, ஆண் பெண் வசமாக, ஆணும் பெண்ணும் அற்றுப் போன நிலையில், அந்தச் சுகமே அலாதி. இப்படி இவனே சொல்லிக் கொண்டான். சிறுவனிடம் பாதிப்பாட்டில் விஸ்கிக்கும், இதர வகையறாக்களுக்கும் பணம் கொடுத்தான். நூறு நூறு ரூபாய் நோட்டுக்கள். அந்தச் சிறுவன், கங்காவை ஏறிட்டுப் பார்க்காமலே போனபிறகு, அவள் கட்டிலிலிருந்து வெளிப்பட்டாள். அந்த சிறுவனை போக்கிரி. பொறம்போக்கு என்று திட்டிக் கொண்டே, கதவைச் சாத்தப்போனாள். மனோகருக்கு, இழந்துபோன உடல் முறுக்கு இன்னும் வரவில்லை. அரைமணி நேரமாவது ஆகும். அப்படி வ்ந்தாலும் முடியுதோ. முடியலையோ. முடிந்தால் சந்தோஷம். முடியாவிட்டால் பாட்டில் மீது பழிபோட்டு விடலாம். அவன் ஆணையிட்டான். "கதவு திறந்திருக்கட்டும்." "அந்தப்பய வாரறதுக்கு அரை அவுரு ஆகுமே. அதுவரைக்கும் என்ன செய்றதாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/91&oldid=762388" இலிருந்து மீள்விக்கப்பட்டது