பக்கம்:ஒத்தை வீடு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 91 "இந்தா பாரு. கதவைச் சாத்தாதே. இந்த இரவு முழுசும் நமக்குத்தான்." அவள், லேசாய் திடுக்கிட்டாள். அவன் குரலில் காட்டிய கடுமை, அவளுக்கு என்னவோ போலிருந்தது. ஆனாலும், தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். அரைமணி நேரம் முக்கால் மணியாகியது. அதுவரைக்கும் அவள்தான் பேசினாள். அவன் ஒற்றை வார்த்தையிலேயே பதிலளித்தான். அவள் பலாவான சில்மிஷங்களைச் ச்ெய்தாள். அந்த சதை வஸ்துவை, அவன் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான். இதற்குள், அந்தச் சிறுவன் ஆடி அசைந்து வந்தான். வாங்கியவற்றை அங்கிருந்த டீப்பாயில் பொட்டலங்களாகவும் பாட்டிலாகவும் வைத்துவிட்டு எஞ்சிய நோட்டுக்களையும் சில்லறைகளையும் அப்படியே கொடுத்துவிட்டு, கொசுறுக்காகக் காத்திருக்காமல் போய்விட்டான். மனோகர், இரண்டு கிளாஸ்களை எடுத்து பாட்டிவில் கால்வாசியைக் காலி செய்தான். எறா மாதிரி நெளிந்து கிடந்த வலுத்த முந்திரிப்பருப்பு ஒன்றை அவள் வாயில் திணித்தபடியே, நீயும் போட்டுக்கோ. என்றான். “єнтажитті ошт.” "பழக்கம் கிடையாதர்..?" "அந்தக் கஸ்மாலம் ஒருவாட்டி வற்புறுத்தித் தந்திருக்கான். அடிக்குப் பயந்து நானும் ஊத்திக்கினேன். அப்புறம் ஆடுனனாம் பாரு ஆட்டம். அப்படி ஆடுனேனாம். அந்தக் கஸ்மாலத்தைப் போடா வாடான்னு திட்டினேனாம். அவன் வழக்கம்போல் அடிக்க. நான் புதுசாத் திருப்பி அடிக்க தெருவே திரண்டிட்டு." “ஒனக்கு புருஷன் மேலே இருந்த வெறுப்பு அப்படி வெளியாயிருக்கு. இங்கே சூழ்நிலை வேறே. ஒரு பெக்' போட்டுக்கோ. 'அதுக்கும் நல்லதாம்." மனோகர், அவள் வாய் விளிம்பில் அந்தக் கிளாஸை திணித்து, உதடுகளை இரண்டாக்கினான். அவள் அழுத்தம் தாங்காமல் வாயைத் திறக்க, அந்தத் திரவம் அவள் வயிற்றுக்குள் தானாய் ஒடியது. அவன் கோழி வறுவல்களையும், உருளைக்கிழங்கு சிப்ஸையும் அவள் வாய்க்குள் திணித்தபோது, அவள் கிளாஸிலிருந்து தானாகவே கொஞ்சம் ஊற்றி வாய்க்குள் விட்டாள். மூன்றாவது பெக்கை தனக்குமட்டுமல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/92&oldid=762389" இலிருந்து மீள்விக்கப்பட்டது