பக்கம்:ஒத்தை வீடு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 93 "அந்த கஸ்மாலம் விட்டதுமாதிரி என்னக் கைவிட்டிடா தேய்யா. நீ விட்டிடுவே. விடத்தான் போறே. எனக்கும் ஒனக்கும் எதுவும் நடக்கல. நடத்தவும் ஒன்னால முடியல. நடக்காமலே முடிக்கிறே. என்னால ஒனக்குப் பிரயோசனமில்ல. ஒன்னால எனக்குப் பிரயோசனமில்ல. என்ன மாதிரி ஒரு வயசுப் பொம்மனாட்டிக்கி இந்த ரூமு முக்கியமில்லய்யா. பெட்டு முக்கியமில்லய்யா. தரை கூடப் போதும்யா. ஏய்யா என்னக் கூட்டி வந்தே...? என்னக் கைவிடப் போறியே." கங்கா, பக்கத்திலிருந்த கிளாஸை எடுத்து பீரோ கண்ணாடி மீது வீசினாள். கையெடுத்துக் கும்பிட்டவனைப் பார்த்துச் சிரித்தாள். கைதட்டினாள். கதவைக் குத்தினாள். கொண்டையை அவிழ்த்துப் போட்டாள். பூக்களைப் பிய்த்துப் போட்டாள். பாட்டுப் பாடினாள். தங்தங்கென்று குதித்தாள். அறைக்கதவு பலமாக தட்டப்பட்டது. மனோகர் கைகளை நெறித்தான். அவள் கன்னத்தில் கூட, ஒன்று போட்டான். அவள், உடனே ஒப்பாரி இட்டாள். இப்போது கதவுக்கு வெளிப்பக்கம் வசவுகள் கேட்டன. அந்தக் கதவு அதிர்ந்தது. மனோகர் வேறு வழியில்லாமல் பெட்டிப்பாம்பாய் கதவைத் திறந்தான். வெளியே நான்கைந்து பேர் நாகப்பாம்பாய் சீறி நின்றார்கள். வரும்போது வாஞ்சையோடு இந்த அறையில் விட்டுப்போன வரவேற்பாளன், இன்னும் அங்கும் இங்குமாய் ஆடிக் கொண்டிருந்தவளை நோட்டம் போட்டபடியே கத்தினான். ‘ஏண்டா. ஒன்னப் பார்த்தா படிச்சவன் மாதிரி தெரியுது. இப்படிப்பட்டவள ஏண்டா கொண்டு வந்தே. ‘ஏண்டா கமால். அவங்கிட்டே போய் நியாயமா கேக்குறே.? கற்பழிப்பு கொலைன்னு பழியை நம்ம மேல போட்டுட்டு, தப்பிக்கறதுக்கு வந்திருக்கான். பேசாம போலீசுக்கு போன் போடு. நீ பேசறியா? நான் பேசட்டுமா..? ஏடி ஒன்னத்தான் இதுக்கு மேலே ஆடின, கடலுக்குள்ள வீசி கடாசிடுவோம். கடாசினவங்கதான். கமால். இன்னுமா டெலிபோனை எடுக்கலை." ஒரு மொட்டைத்தலை தடியனின் அதட்டலுக்குக் கட்டுப்பட்டு, வரவேற்புக் கமால், அந்த அறைக்குள் இருந்த டெலிபோனை எடுத்தான். பிரமித்து நின்ற மனோகருக்கு விபரீதம் புரிந்துவிட்டது. கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடினான். வேண்டாம் ஸார். வேண்டாம் ஸார். அந்தச் சமயத்தில் கங்கா, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றினாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/94&oldid=762391" இலிருந்து மீள்விக்கப்பட்டது