பக்கம்:ஒத்தை வீடு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ஒத்தை வீடு "ஏன. அறே.? போன்போட்டாப் போடட்டுமே. போலீசு - கொம்பனா. டேய் கஸ்மாலம். போலீசு மச்சிக்கிட்ட பேசுடா. இதுவரை தயங்கிய கமால், இப்போது டெலிபோன் எண்களை உறுதியாகச் சுற்றினான். மனோகர் அவன் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டே மன்றாடினான். “என் கழுத்துல கிடக்கிற இந்த நாலு பவுன் செயினை எடுத்துக்குங்க சார். பையில இருக்கிற ரெண்டாயிரம் ரூபாயும் எடுத்துக்குங்க சார் இந்த கடிகாரத்தையும் வாங்கிக்கிங்க சார். ஏய் கங்கா. சார் காலுல விழுடி.." மனோகர் சுட்டிக் காட்டிய அந்த தடித்த மனிதரை அற்பப் புழுபோல் பார்த்துவிட்டு, கங்கா, மனோகரிடம் மல்லுக்கு வந்தாள். "அடப்போடா. அந்தக் கஸ்மாலம் மட்டும் ஒனக்குப் பதிலா இருந்திருந்தால், இந்த மொட்டைப்பயல இன்நேரம் கீய்சுப் போட்டிருப்பான்." தடித்த மொட்டை, கமாலிடமிருந்து டெலிபோனை வாங்கியபோது, மனோகர், அவன் காலில் விழுந்தான். "வேண்டாம் ஸார், தயவு செஞ்சு வேண்டாம் ஸார். நான் பெரிய ஆபீஸர் ஸார். அரெஸ்டானால், என் வேலை போயிடும் சார். நான் சொன்னதெல்லாம் ஒங்களக்கு தாரேன் சார்." 'சரி கீழே வந்து நீ சொன்னதையெல்லாம் கழட்டிக் கொடுத்திட்டு லாரியப் பிடித்து ஒடு. இந்த தத்தேறி குட்டி இங்கேயே இருக்கட்டும். காலைல அனுப்பி வைக்கிறோம்." "நீங்க நினைக்கிறமாதிரி அவள், அப்படிப்பட்டவள் இல்லை சார். போதையிலே உளறினாலும். புருஷனுக்கு பதிலா என்னையே நம்பியிருக்கிறவள் சார்." "இவன் சரிப்படமாட்டான். போலீசு நம்பர் என்கேஜ்டா? சரி. மூணாவது மாடியில இருக்கிற, சப்-இன்ஸ்பெக்டரைக் கூட்டி வா. ஏய் ஒன்னத்தான் எதுக்குடி புடவையைக் கட்டுறே. உக்காருடி" "சார். சார் என் மானம் போயிடும். வேலை போயிடும். எங்களை விட்டிடுங்க சார்." "இந்தா பாருடா. நீ பண்ணின காரியத்துக்கு நாங்களே ஒன்ன போலீசுல ஒப்படைக்கணும். ஆனால், ஒன்னப் பார்த்தால், பாவமா இருக்கு. நீ மட்டும் தப்பிச்சுப் போயிட்டே இரு இவள நாங்க விடப் போறதில்லை. டேய். அவ புடவையப் பிடுங்குடா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/95&oldid=762392" இலிருந்து மீள்விக்கப்பட்டது