பக்கம்:ஒத்தை வீடு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 95 மொட்டைத் தலையனின் தடித்த கால்களில் போட்டிருந்த கைகளை, மனோகர் வெட்டருவாள் வீச்சோடு எடுத்தான் அவனுக்குள் அவனையறியாமலேயே ஒன்று விஸ்வ ரூபம் எடுத்தது. அவர்களை நேருக்கு நேராய்ப் பார்த்து ஆணையிட வைத்தது. வீறாப்பாய் நின்று சூளுரைக்க வைத்தது. சரி. போலீஸைக் கூப்பிடுங்க ஆனது ஆகட்டும். என் உயிர் போவதற்கு முன்னால, இவள நீங்க தொட முடியாது. ለለ எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து ரகசியமாய் ஏறினார்களோ, அதே இடத்திற்கு அருகே மனோகரும், கங்காவும் ஆட்டோவில் இருந்து பகிரங்கமாய் இறங்கினார்கள். இரவு மரித்துக் கொண்டிருக்கும்போது புறப்பட்டு, பகல் விடியல் குழந்தையாய் பிறந்தபோது, அந்தக் குழந்தையின் தொப்புள் கொடிபோல் ஆகாயத்தில் செஞ்சிவப்பாய் ஒளிக்கற்றை. அந்தப் பிறப்பை அறிவிக்கும் குலவைச் சத்தம்போல் பறவைகளின் சத்தங்கள். கங்கா, மனோகரை கண்கூசிப் பார்த்தாள். அந்த அறையில் நடந்த அமர்களத்திற்குப் பிறகு இருவருமே பேசவில்லை. முகத்துக்கு முகம் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்த்துக் கொண்டார்கள். தலைகளைத் தாழ்த்திக் கொண்டார்கள். மவுனம் பேசிற்று. பார்வைகள் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டன. அவன் பேன்ட் பையில் கையிட்டு ஐந்து இருபது ரூபாய் நோட்டுக்களை, வெறுமையாய் புரட்டிய அவள், கைகளுக்குள் திணித்தான். அவள், அந்த நோட்டுக்களை, அவன் பைக்குள் சொருகியபடியே, ஆற்றாது அரற்றினாள். "அந்தப் பசங்க கிட்ட நானு அப்படிப்பட்டவள் இல்லேன்னு நீ சொன்னப்போ பெருமைப்பட்டேன். ஆனால், இப்போ நானு அப்படிப்பட்டவள்தான்னு நினைக்கிறது மாதிரி பணத்த நீட்டுறியே சாரே." மனோகர், அவளை, அவள் கண்கள் வழியாய்ச் சந்தித்தான் கூடவே அவள் நினைவூட்டும் சம்பவக் கோர்வைகள் தானாய் மனதில் மோதின. இப்போதே அந்த நிகழ்ச்சிகள் அங்கேயே நடப்பதுபோல் கண்கள் பார்த்தன. காதுகள் கேட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/96&oldid=762393" இலிருந்து மீள்விக்கப்பட்டது