பக்கம்:ஒத்தை வீடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தை வீடு போதை தெளிந்து பயந்து நின்ற கங்காவை, தன் உடம்போடு உடம்பாய் இணைத்துக்கொண்டு, அவன் சூளுரைக்கிறான். வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவது குற்றமில்லை. ஒருத்தி உடலை விற்றால்தான் குற்றம். அதை நட்புக்காக விட்டுக் கொடுத்தால் அதில் தப்பில்லை. இவள் என்னோட தோழி. நாங்கள் உறவாடுவது எங்கள் சொந்த விவகாரம். வேணுமின்னா ஒன் ப்ோலீஸை வரச் சொல்லைய்யா என்று சவால் இடுகிறான். உடனே கமால் சிரித்தபடியே. சட்டந் தெரியாதவன்தான்யா போலீஸ், அதத் தெரிஞ்சு வச்சிருந்தால், அதை எப்படி வளைக்கனுமுன்னு அவங்களுக்குத் தெரியும். என்கிறான். உடனே மனோகர் ஆகாயமும் பூமியும் ஆனவன்போல் கர்ஜிக்கிறான். இந்தா பாருங்கப்பா. நீங்களும் போலீசுமா சேர்ந்து என்னைக் கட்டிப் போட்டுட்டோ இல்லை கொலை செய்துட்டோ இவள, மானபங்கப்படுத்த முடியும். அப்புறம் என்ன நடக்கும்.கொலைக் கேஸ்ல உள்ள போவீங்க இல்லாட்டி நான் நியாயம் கிடைக்கறது வரைக்கும் அதாவது ஒங்க கைல காப்பு மாட்டறது வரைக்கும் ஒய மாட்டேன். உண்ணா விரதம் இருப்பேன். ஊரக் கூட்டுவேன். மறியல் செய்வேன். எதுவும் பலி க்காட்டி தீக்குளிப்பேன். எங்கே அவளத் தொட்டுப் பாருங்க. எங்கே டெலிபோன் செய்யுங்க...' என்று அதட்டுகிறான், மிரட்டுகிறான். அவர்கள் அடங்கிப் போகிறார்கள். அப்படியும் அவன் தங்கச் செயினையே பார்க்கிறார்கள். மனோகரோ இந்த அறைக்கு ஏற்பட்ட சேதாரத்துக்கு முன்பணத்துல கழித்துக்கலாம். இப்ப மொதல்ல வெளில போங்க இல்லாட்டி நானே போலீஸுக்கு போன் செய்வேன். உங்களுக்கு இன்ஸ்பெக்டரத்தான் தெரியும். எனக்கு ஐ.ஜியையே தெரியும். என்கிறான். அவளை ஆக்கிரமிக்கப் போனவர்கள், ஆக்கிரமிக்கப் பட்டவர்களாய் வெளியேறுகிறார்கள். மனோகர், ஒரு மாவீரன்போல் அவளைப் பார்க்கிறான். அவள் நீட்டிய ரூபாய் நோட்டுக்களை தனது பைக்குள் திணித்துக் கொண்டே ஆட்டோவுக் காவது என்று ஒரு வார்த்தையை ஒரு வாக்கியமாய் இழுக்கிறான். அவளோ, நான் நடந்தே போயிடுவேன் சாரே நடந்து நடந்தாவது வழி குறையுறது மாதிரி என் பாரம் குறையுறதான்னு பார்க்கிறேன் சாமி. என்கிறாள். அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தே, நடக்கிறாள். மீண்டும் அவனிடம் திரும்புகிறாள். ஆகாயத்தைச் சாட்சியாக வைத்துச் சொல்வது போல், அந்த ஆகாயத்தைப் பார்த்துவிட்டு, அவனிடம் பேசுகிறாள். "நீ ஆம்பளைங்களுலேயே பெரிய ஆம்பளை ஸாரே. உன்ன மாதிரி ஆம்பளைய இப்பதான் நான் பாக்கேன் ஸாரே . பொம்மனாட்டிக்கிட்டே போறவன் சாதா ஆம்பளைன்னா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/97&oldid=762394" இலிருந்து மீள்விக்கப்பட்டது