பக்கம்:ஒத்தை வீடு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஒத்தை வீடு சங்கரியையும் காப்பாற்ற வேண்டும். எல்லா வகையிலும் காப்பாற்ற வேண்டும். மனோகர், பெரு விரலைப் பார்த்தபடியே நடந்தான். அக்கம் பக்கம் எந்தப் பெண்ணும் இயங்குவது அறியாமல், நடந்து கொண்டிருந்தான். தன்னைத்தானே தரிசித்ததில் ஒரு பெருமிதம். இந்த உணர்வையும் குணத்தையும் ஆவியாக்காமல் மனதுக்குள்ளேயே கட்டிப்போட வேண்டும் என்ற வைராக்கியம். அந்த மருத்துவமனையின் நுழை வாயிலுக்குள் சென்றதும், மனோகரின் கால்கள் லேசாய்த் தளர்ந்தன. கால்களோடு சேர்ந்து தலையும் தாழ்ந்தது. எந்த முகத்தோட அவளைப் பார்ப்பது? தரையைப் பார்க்க மனமில்லாமல், அண்ணாந்து பார்த்தான். அந்தக் கட்டிடத்திற்கு மேலே தலைநீட்டிய அசோக மரங்களை அண்ணாந்து பார்த்தபடியே நடந்தான். ஏதோ ஒன்று மோதுவது கண்டு, கண்ணிறக்கினான். அவனிடம் முட்டுப்பட்ட கட்டுப் போட்ட மனிதர் ஒருவர், இயல்பாகச் சொல்வதுபோலவும், தன்னை நினைத்துக் கொண்டது போலவும் வலி அடக்கிப் பேசினார். "அண்ணாந்தும் பார்க்கப்படாது. குனிந்தும் நோக்கப்படாது. நேராப் பார்க்கணும். நேரா நடக்கணும். நம்மோட சிரமம், பிறத்தியாரைச் சிரமப்படுத்தக் கூடாது." மனோகர் நின்றான். தன்பாட்டுக்குப் போய் கொண்டிருந்த மனிதரின் முதுகைப் பார்த்தான் அந்த முதுகு புறமுதுகல்ல. அவனுக்கு ஒரு கேடயம். அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அசரீரி வார்த்தைகள், மனோகர், லிப்டில் ஏறி, மூன்றாவது மாடிக்கு வந்தான். அதுவே தரைத்தளம் மாதிரியான வரவேற்பறை பார்வையாளர்கள் இருக்கைகள். அரசாங்க மருத்துவமனை காணாத பளபளப்பான தரை. இந்த மருத்துவமனை இவன் சக்திக்கு அப்பால் பட்டதுதான். போலீஸ் வழக்கு வம்பு வரக்கூடாது என்பதற்காக, தெரிந்தவர் ஒருவர் மூலம் கிடைத்த இடம். சங்கரியின் அறைக்கு முன்னால் நாலு பேர் அம்மா, அக்கா, மாமனார், மாமியார் அக்கா, அவ்வப்போது பேசுகிறாள். அம்மாவின் கை வீச்சுக்களுக்கிடையே முகமிட்டு, அவளுக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பேககிறாள் மாமனார், தலையை ஒருச்சாய்த்து நிற்கிறார் மாமியார் இரண்டு கைகளையும் தலையில் குவித்துக்கொண்டு தடுமாறுகிறாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/99&oldid=762396" இலிருந்து மீள்விக்கப்பட்டது