பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை

இப் புஸ்தகத்தில், பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் உபயோகப் படக்கூடிய ஒன்பது சிறு நாடகங்கள் அடங்கியிருக்கின்றன. இவற்றுள் "பெண்புத்தி கூர்மை" என்பது, திருச்சிராப்பள்ளி ரேடியோவுக்காக நான் எழுதியது. அதை அச்சிட எனக்கு அனுமதி கொடுத்த அந்த ரேடியோ தலைவர்களுக்கு என் மனமார்ந்த வத்தனத்தைச் செலுத்தக் கடமை பட்டிருக்கிறேன். மற்றவைகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் அமைக்கப் பட்டவைகளாம்.

இவைகளேயாவது, நான் எழுதியுள்ள மற்ற நாடகங்களேயாவது நடிக்க விரும்புவோர் எனது அனுமதியை முன்பு பெற்றே நடிக்க வேண்டுமென்பதைக் கவனிப்பார்களாக.

70 ஆச்சாரப்பன் தெரு

சென்னை இப்படிக்கு

5-12-40 ப. சம்பந்தம்