பெண்புத்தி கூர்மை 4.
புடைவை எனக்கு வாங்கித் தரவேண்டும்-நான் அந்த கலியாணத்திற்குக் கட்டிக் கொள்ள.
சி. அப்படி மாத்திரம் நேரிட்டால், நூறு ரூபாயல்ல இரு நூறு ரூபாய் புடைவை வாங்கித் தருகிறேன். எப்படி யாவது பரமேஸ்வரன் அருளால், அவள் தகப்பருைக்கு நான் வாக்களித்தபடி இவர்களுக்கு கலியாணம் செய்து வைத்தால் போதும் - என்ன காலுமணியாயும் பால கிருஷ்ணன் வரவில்லே - சரியாக மணிப்பிரகாரம் வந்து விடுவான் என்ருயே !
பாலா. இன்னும் நாலு அடிக்கவில்லேயே
(கடியாரம் நான்கு அடிக்கிறது) சி. இதோ அடிக்கிறது ! (வெளியில் பைசிகல் சத்தம்) பாலா. இதோ வருகிருன் !
(பாலகிருஷ்ணன் வருகிருன்.) சி. உட்கார் பாலகிருஷ்ணு-கோலாரில் எல்லோரும் rேமம்
தானே. - பா. கேஷமம்தான். பாலா. ஏனப்பா--காகிதம் போட்டால் பதில் போட கூட
உனக்கு சவகாசமில்லையோ ? பா. அக்காள், அந்த காகிதத்திற்கு என்ன பதில் போடு கிறது ? நான்தான் உனக்கு பலதரம் சொல்லியிருக்கி றேனே, அந்த மைசூர் காலேஜில் படிக்கும் ஞானம்பா ளேக் கலியாணம் பண்ணிக் கொள்ளுகிற விஷயத்தைத் தவிர மற்ற எந்த சமாசாரமென்ருலும் கேள், பதில் சொல்லுகிறேன். பாலா. அந்த பெண்விஷயத்தைப் பற்றிய நான் கடைசி கடி தத்தில் எழுதியிருந்தேன் ? - அவள் சமாசாரம்தான் அப்பொழுதே முடிவாகி விட்டதே. இப்பொழுது நீ அவளேக்கலியாணம் பண்ணிக்கொள்ள விரும்பினுலும் =9 g (LDL?-il-lif gil. பா. அப்பாl- ஏன் அப்படி : பாலா. அவள் சீமைக்குப் புறபபட்டு விட்டாளாம், இன்னும் அங்கே போய் வயித்தியப் பரீட்சைக்குப் படிக்க வேண்டு மென்று. -
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/51
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
