பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெண்புத்தி கூர்மை 53 மூன்ரும் காட்சி இடம்:-டாக்டர் சிவராம முதலியார் வீட்டில் ஒர் அறை. காலம்-காலே. பாலகிருஷ்ணன் டடுக்கையில் படுத்தவண்ணம் இருக்கிருன். சிவராம முதலியார் அவன் பக்கவில் கிற்கிரு.ர். பாலாம்பாள் அருகில் கிற்கிருள். சி. பாலகிருஷ்ணு, இனி ஒன்றும் பயமில்லை. இனிமேலாவது ஜாக்கிரதையாயிரு, கிணற்றின் ஆழம் பார்க்காதே ே தப்பிப் பிழைத்தது தெய்வாதீனம்: அம்மட்டும் அந்தப் பெண்-லோகாம்பாள்-உடனே கிணற்றில் குதித்து உன்னைக் காப்பாற்றியிராவிட்டால்-இன்றைக்கு ஒரு வருக்கு சஞ்சயனம் கடத்தியிருக்க வேண்டி வந்திருக்கும், அன்றியும் தலையில் பட்ட காயத்தை உடனே பர்ஸ்டு எய்ட் (first aid) கொடுத்து கட்டியிராவிட்டால், உன் உயிருக்கே அபாயம் நேர்ந்திருக்கும். உன் உயிரை அவள் தான் காப்பாற்றினுள் இருவிதத்திலும். ஆகவே அவ ளுக்கு நீ மிகவும் நன்றியறிதல் பாராட்ட வேண்டும். பா. ஆமாம் அத்தான்-நான் போய் வந்தனம் சொல்லி விட்டு வருகிறேன். சி. அடடெ எழுந்திருக்காதே முட்டாள், கிரம்ப படித்த வன்தான்!-இது கூடவா தெரியாது? இந்த ரணம் ஆறி இக்கட்டை நான் அவிழ்க்கிறவரையில் படுக்கையை விட்டு நீ எழுந்திருக்ககூடாது-பாலு, கான் உத்திரவு கொடுக்கும் வரையில் இவனே ப் படுக்கையை விட்டு எழுந்திருக்கவிடாதே-கான் வருகிறேன். [போகிருர்.) பா. அக்காள், அப்பெண்ணுக்கு-லோகாம்பாளுக்கு-என் உயிரைக் காப்பாற்றியதற்காக-நான் வந்தனம் செலுத்தவேண்டுமே! பாலா. அதை நான், நீ சொன்னதாகச் சொல்லிவிடுகிறேன். பா. -ேஅவளே - இங்கு கொஞ்சம், அழைத்துவாயேன்நான் என் வாயால்-சொன்னல்-எனக்கு திர்ப்தியா யிருக்கும்.