பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜமீன் தார் வரவு குத் தெரியாது. உன் கதியும் என்ன வாயிற்றோ என்று நான் அறியேன், ஆயினும் இப்பொழுதாவது இப்படி.. ஆச்சரியகரமாய் உன்னை நான் கண்டு பிடித்தேனே என்று மிகவும் சந்தோஷப்படுகிறேன். நீ என்னுடன் வந்து என் வீட்டில் வாழவேண்டும். என் பெண்சாதியும் பெண்களும் இவ்வளவு நற்குணமும் நன்னடத்தையும் 2.டைய் உன்னை சந்தோஷத்துடன் வரவேற்பார்கள். க. ஐயா, நீங்கள் என்னிடம் காட்டும் அன்பிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆயினும் பணக்காரராகிய

  • உங்கள் குடும்பத்தில் ஏழையான நான் எப்படி வாழ்

"ஜ, அதெல்லாம் ஒன்றும் கஷ்டமில்லை, ஏழைகளாகிய சுற்றத்தாரை இகழ்ச்சியாக மதிக்கும் குடும்பமல்ல என் குடும்பம். அன்றியும் உனது பேச்சும் நடவடிக்கையும் நீ தகுந்த அந்தஸ்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறாய், என்று தெரிவிக்கின்றன. க. இறந்துபோன என் பாட்டியார் தன்னால் கூடியமட்டும் எனக்கு கல்வி கற்பித்தார்கள். அவர்கள் உ.தாரணத் தைக் கொண்டும், அவர்கள் கற்பித்ததைக் கொண்டும் நான் பலன் அடையாவிட்டால் அது என் குற்றமாகும். ) ஐ, மிகவும் தக்கபடி பேசுகிறாய், உன் பேச்சைக் கேட்க உன் மீது பிரீதி எனக்கு அதிகமாய் உண்டாகிறது. சரி, என் னுடன் புறப்பட்டு என் வீட்டுக்குப் போக ஏற்பாடு, செய், உனக்கு இவ்வளவு அன்பு பாராட்டிய இவர், களுக்குத் தக்கபடி பிரதி செய்ய ஏற்பாடு செய்கிறேன்." பொ, கன்னியம்மா, உனக்கு வாய்த்த அதிர்ஷ்டத்திற்காக நாங்கள் சந்தோஷப் படுகிறோம், ஆயினும் உன்னை விட் டுப் பிரிய வேண்டுமே யென்றுதான் எங்களுக்கெல்லாம் துக்கமா யிருக்கிறது. க. என்னைத் தாய் தந்தையர்களைப் போல வளர்த்த உங் களை விட்டுப் பிரிவதென்றால், எனக்கும் வருத்தமாகத் : தானிருக்கிறது. ஒரு ஆதரவுமில்லாத அனாதையாய் நான்