பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

விநாயகரைப் பாடிய அதிராவடிகள் ஞானக் கன்ருகிய அப் பெரு மான் சப்பாணி கொட்டுவதை வருணிக்கிறர். நிலந்துளங்கவும் மேருமலை அசையவும் வானம் துளங்கவும் அக் கன்று சப்பானி கெர்ட்டி விளையாடுகிறது (9.) பட்டினத்துப் பிள்ளையார் தம்மை நாயகியாக்கிக் கொண்டு நடராசப் பெருமான்பால் காதல் கொள்கிருர், அப் பெருமானே ஏற்றிக்கொண்டு எங்கள் தெரு வழியாக வரக்கூடாதா?" என்று இறைவன் வாகனமாகிய விடையை நோக்கிக் கூறுகிருர் (10.) திருவிடை மருதூர்ப் பெருங் தேனைச் சுவைத்தவர் அவர். அவர் இறப்பும் பிறப்பும் அற்ற கிலையை அடைந்தவர். புலன்களின் மயக்கு நீத்தவர். ஆசையை அறுத்தவர். யாரிடமும் எதையும் கேட்கவேண்டாத சிறைவு பெற்றவர் (11.)

நம்பியாண்டார் நம்பி ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து அகத்துறைப் பாட்டுப் பாடுகிறர். அவர் மலையில் ஒரு தலைவன் ஓர் அழகியைக் காதலிக்கிறன். கினேப் புனம் காவல் செய்யும் அவளேக் கண்டு அவளது சாயல், மொழி, விழி இவற்றில் ஈடுபட்டு, ' இவளாவது ! தினைப் புனத்தைக் காப்பதாவது! இவளைத் தம் இனமென்று எண்ணி மயிலும் கிளியும் மானும் வந்து கதிர்களை யெல்லாம் அழித்துவிடுமே ' என்று கூறுகிருன் (12.)

இந்தப் பாடல்களின் நடை வகையைப் பார்த்தால் சங்க காலப் பாடல்களைப் போன்ற அமைப்பைச் சிலவற்றில் காண லாம்; பிற்காலத்துப் பாடல்களின் அமைப்புச் சிலவற்றில் இருக் கும். பழமையும் புதுமையும் இணேந்த அழகைப் பதினோாங் திருமுறைப் பாடல்கள் கொண்டுள்ளன.

முருகன் கிருவருளேயும் என்னுடைய ஆசிரியப்பிரானின் நல்லாசியையும் துனேக்கொண்டு தொடங்கிய திருமுறை மலர்கள் என்ற நூல் வரிசையில் இது பதினேராவது புத்தகம். இம் மாலை கிறைவடைய இன்னும் ஒன்றே ஒன்று எஞ்சியிருக்கிறது. முருகன் திருவருள் அதனையும் நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

கல்யாணபுரம் மயிலாப்பூர் 20-9-55

கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/10&oldid=548427" இலிருந்து மீள்விக்கப்பட்டது