பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே ஒன்று

காலையில் எழுந்தவுடன், 'பால்காரன் இன்னும் வரவில்லையே! என்று அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருேம். பால் வந்து காபிபோட்டுத் தந்து உண்ட பிறகுதான் நமக்கு கம்முடைய இயற்கையான கிலே வருகிறது. காபி வயிற்றுக்குள் போனபிறகு அடுத்தபடி தொழிலோ, விவசாயமோ, உத்தியோகமோ அதைப்பற்றிய கவலே வருகிறது. உத்தியோகமாக இருந்தால், மேலதிகாரி யைத் திருப்திப் படுத்துவதைப் பற்றியும், அவர் நமக்குத் தந்திருக்கும் வேலையை முடிப்பதைப் பற்றியும் யோசனை கள் உண்டாகின்றன. குடும்ப காலகே.பத்துக்கு வேண் டியபடி பணம் கிடைக்காமல் திண்டாடுகிருேம். வரவு செலவுகள் ஒத்து வருவதில்லே. குடும்பத்தில் ஒவ்வொரு வரையும் பற்றி நுாறு கவலைகள். தொழிலாளிக்கும், விவசாயிக்கும் இப்படியே பல யோசனைகள், பல முயற்சி கள், பல கவலைகள். . .

பணக்காரருக்கு இப்படி ஒன்றும் இல்லை என்று ஏழைகள் கினைக்கிருர்கள். ஏழைகளுக்கு உள்ள கவலைகள் அவர்களுக்கு இல்லேயே தவிர, அவர்களுக்கென்று முத்திரை பெற்ற பல கவலைகள் இருக்கத்தான் இருக்கின்றன. ஏழை அடுத்த வேளைக்குச் சோறு இல்லேயே என்று கவலைப்படு கிருன் பணக்காரனே போன வேளையில் சாப்பிட்ட உணவு சீரணமாகாமல் வயிற்றை வலிக்கிறதே என்று வேதனைப் படுகிருன். நமக்குக் கடன் கொடுப்பார் யாரும் இல்லையே என்று வறியவன் ஏங்குகிருன்; கொடுத்த கடன் வரவில்லையே என்று செல்வன் கவலைப்படுகிருன். கடவுள் ஏழையாகிய கமக்கு இத்தனே குழந்தைகளைக் கொடுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/11&oldid=548428" இலிருந்து மீள்விக்கப்பட்டது