பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

ஒன்றே ஒன்று

சோதிக்கிறாரே என்று அவன் வருந்துகிறான்; கடவுள் நமக்கு ஒரு குழந்தைகூட அருளவில்லையே என்று இவன் ஏங்குகிறான்.

பொதுவாக உலகில் உள்ளவர்களில் யாரைக் கேட்டாலும் அவர் தமக்குக் குறைகள் இருப்பதாகவும் அவற்றால் படும் கவலைகள் பல என்றும் சொல்வார். சும்மா இருக்கிற போது அவருடைய மனத்தில் ஓடிக்கொண்டிருக்கிற எண்ணங்களைப் படத்தைப்போலக் காணும் வாய்ப்புக் கிடைத்தால், என்ன என்ன காட்சிகளைக் காணலாம், தெரியுமா? தீய எண்ணங்களும், நல்ல நினைவுகளும், பொறாமையும், திருப்தியும், சென்ற கால நிகழ்ச்சி பற்றித் துன்பமும், சிலவற்றை எண்ணி இறுமாப்பும், வருங்காலச் செயலைப் பற்றி அச்சமும், ஒருசார் நம்பிக்கையும் இப்படிக் கணக்கிட முடியாத நிழற் படங்கள் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கும்.

தெரியாமலா வள்ளுவர்,

“ஒருபொழுதும் வாழ்வ தறியார்; கருதுப,
கோடியும் அல்ல பிற

என்று சொன்னார்?

லபல நினைவுகளை நினைக்கும் இயல்பு இந்த மனத்துக்கே உரிமையானது. மனத்தை வாயுவினுடைய அம்சமென்று சொல்வார்கள். வாயுவைப்போல இது எப்போதும் சலனம் அடைந்து கொண்டே இருக்கிறது. இருந்த இடத்தில் இருந்தபடியே பதினான்கு உலகங்களையும் சுற்றி விடும் வியக்கத் தக்க ஆற்றல் இதற்கு இருக்கிறது.

இதை அடக்கினால் பெறாத இன்பம் எல்லாம் பெறலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மற்றவர்கள் செய்வதற்கரிய சித்து வேலைகளை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/12&oldid=1314344" இலிருந்து மீள்விக்கப்பட்டது